உங்களுடைய ஜாதகத்தில் நவகிரக தோஷம் உள்ளதா? தோஷங்களை போக்கும் பரிகாரம்.

navagraham-jathagam

ஒருவருடைய வாழ்க்கையின், நல்லது கெட்டது அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களுடைய ஜாதக கட்டம் தான். அந்த ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷம், ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தது. தோஷம் உச்சகட்டத்தை தொடும் சமயத்தில், அதிகப்படியான பணத்தை செலவழித்து பரிகாரங்களை செய்வதற்கு பதிலாக, முழுமையான நம்பிக்கையோடு இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியம். உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தால் உங்களுக்கு தோஷம் இருக்கிறது, என்பதை உங்களுடைய ஜோசியரிடம் உங்கள் ஜாதகத்தை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த தோஷத்திற்கு எந்த இறைவனை வழிபட வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

jathagam astro

சிலருக்கு ஜாதக கட்டத்தில் ராகு கேது தோஷம் இருக்கும். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களை சந்தித்து வருவார்கள். குறிப்பாக இவர்களுக்கு தொடர் தோல்வி இருக்கும். இப்படிப்பட்டவர்கள், வாரம் தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு, எள் சாதம் செய்து வைத்து அர்ச்சனை செய்து வரும்பட்சத்தில் ராகு கேது தோஷத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அல்லது வாரம் தோறும் வரும் சனிக்கிழமையன்று, ஹனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலையை அணிவிக்க வேண்டும்.

சிலபேருக்கு ஏழரை சனியின் மூலம் அதிகப்படியான பாதிப்பு இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று, அரளிப் பூ அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்தால் ஏழரை வருடத்தில் ஒருமுறையாவது, திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக அங்கு சென்று கடலில் மூழ்கி குளித்து விட்டு, அதன் பின்பு முருகன் தரிசனம் செய்வது நல்ல பலனைத் தரும். ஒரு இரவு, திருச்செந்தூர் முருகன் கோவிலிலேயே தங்கி, மறுநாள் காலை வீடு திரும்ப வேண்டும்.

thiruchendur

சில பேருக்கு புதன் தோஷம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள். படிப்பில் அதிக ஆர்வம் இருக்காது. ஞாபக சக்தி குறையும். நல்ல வேலை கிடைக்காது. வாழ்க்கையில் அதிகப்படியான கஷ்டத்தை எதிர்கொள்வார்கள். ஒருமுறை இவர்கள் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்வது நல்லது. முடிந்தால் திருப்பதிக்கு சென்று ஒரு முறை பெருமாளை தரிசனம் செய்யலாம்‌ கீழ் திருப்பதியிலிருந்து நடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்வது மேலும் சிறப்பு தரும்.

- Advertisement -

சிலருக்கு ஜாதகத்தில் சுக்கிரனின் தோஷம் அமைந்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் அதிகப்படியான பணக்கஷ்டம் இருக்கும். தொழில் நஷ்டம் இருக்கும். முன்னேற்றத்தில் தடை இருக்கும். பெரிய பணக்காரர்களாக இருந்தால் கூட, அந்த சொத்து வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. இவர்கள் குரு பகவானை வணங்க வேண்டும். அல்லது உயிரோடு இருந்து சமாதி அடைந்த மகான்களை வணங்குவது மிகவும் நல்லது.

guru-bhagavan

இதையெல்லாம் தவிர்த்து சில பேருக்கு ஜாதக கட்டத்தில் தோஷம் எல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், அவர்கள் எப்போதுமே ஒரு மன அழுத்தத்தோடு இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் மனக்குறைகளை, தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இப்படி மன அழுத்தத்தோடு இருப்பது மிகவும் தவறு. இப்படிப்பட்டவர்களின் மன வேதனையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

broken-coconut

மாதத்துக்கு ஒருமுறை விநாயகர் கோவிலுக்கு சென்று உங்கள் கையாலேயே ஒரு தேங்காயை சூரை உடைத்து விடவேண்டும். உங்கள் மனதில் இருக்கும் குறைகளை விநாயகரிடம் சொல்லி, பின்பு அந்த தேங்காயை உடையுங்கள். உங்கள் மனதில் இருக்கும் கஷ்டங்களும் சிதறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் தீய சக்தி இருப்பதை இந்த பரிகாரம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். அதை விரட்டும் வழி இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Navagraha dosha remedies in Tamil. Navagraha dosha pariharam. Navagraha dosha remedies. Navagraha dosha parihara. Navagraha dosha nivarana.