நாள் பட்ட கஷ்டங்கள் கூட நம்மை விட்டு விலக, கெட்ட நேரத்திலும் நல்லது நடக்க நவகிரகங்களை இப்படி தான் வழிபாடு செய்ய வேண்டும்.

navagraham-vilakku
- Advertisement -

நாம் வழிபடக்கூடிய நவகிரகங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்றுதான் சொல்லுவார்கள். இறைவனின் ஆணைக்கு இணங்க நவகிரகங்கள், இந்த பூலோகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நவகிரகங்களை நிறைய பேர் கோவிலுக்கு செல்லும்போது ஒன்பது சுற்று சுற்றி வழிபாடு செய்வது கூட கிடையாது. ஆனால் கோவிலுக்கு சென்றால் நிச்சயமாக நவகிரகங்களை வழிபாடு செய்ய வேண்டும். முறையாக நவ கிரகங்களை எப்படி வழிபாடு செய்து வந்தால், வாழ்வில் வரக்கூடிய இன்னல்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய சிறிய ஆன்மீக ரீதியான தகவலை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

முதலில் கோவிலுக்கு செல்கின்றோம். கோவிலிலுள்ள மூலவரை தரிசனம் செய்துவிட்டு அதன் பின்பு அங்கு இருக்கக்கூடிய மற்ற தெய்வங்களை எல்லாம் தரிசனம் செய்து விட்டு இறுதியாக நவக்கிரகத்தை வழிபாடு செய்வதற்காக வருவோம். நிறையபேர் நவகிரகங்களை ஒரே ஒரு சுற்று சுற்றி விட்டு, ஒரு நிமிடம் கூட அமைதியாக நின்று வணங்காமல் அப்படியே வந்து நமஸ்காரம் செய்து விட்டு கோவிலை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.

- Advertisement -

முடிந்தவரை நவகிரக சன்னிதானத்திற்கு சென்று 9 முறை வலம் வந்து, 9 நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, நவகிரக சன்னதி முன்பு சிறிது நேரம் அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘அறிந்தும் அறியாமலும் நான் செய்த தவறுகளுக்கான தண்டனையை குறைத்து, மன்னிப்பு அருள வேண்டும்’ என்று நவகிரகங்களிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது நடப்பதற்கு நம்முடைய கிரகநிலைகள் தான் முதலில் காரணமாக இருக்கின்றது. இப்படி நவகிரகங்களை மனதார வழிபாடு செய்யும்போது தான், கிரக நிலைகளால் நமக்கு வரக்கூடிய துன்பங்கள் முற்றிலும் நீங்கிவிடும் என்று சொல்ல முடியாது. அவரவர் செய்த பாவத்திற்கான தண்டனையை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் வரக்கூடிய துன்பங்கள் துயரங்களின் தாக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.

- Advertisement -

ஜாதக கட்டத்தில் கெட்ட நேரம் வரும்போதும் நமக்கு நடக்க வேண்டிய நல்லதில் எந்த ஒரு தடையும் ஏற்படாது. சரி தினமும் கோவிலுக்கு செல்பவர்கள் நவகிரகங்களை வழிபாடு செய்ய முடியும். தினமும் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது. ஒன்பது நவரத்தின கற்கள் ஒன்றாக சேர்ந்து, மோதிரமாகவோ அல்லது ஒரு காயின் போலவும் கடைகளில் விற்கப்படுகிறது அல்லவா. அந்த நவரத்தின கற்களை வாங்கி ஒரு சிறிய தட்டில் வைத்து, நவரத்தினங்களை நவக்கிரகங்கள் ஆக பாவித்துக் கொண்டு பூஜை அறையில் வைத்து ஒரே ஒரு மண் அகல் தீபம் ஏற்றி தினம்தோறும் நவகிரகங்களை நினைத்து வழிபாடு செய்வது நல்லது.

வாழ்க்கையில் எதுவுமே இதுவரை நல்லதாக நடக்கவில்லை. எல்லாம் கெட்டதாகவே நடக்கிறது. வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லை. வெளியில் சென்றால் கடன் தொல்லை. இல்லற வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை, சொல்பேச்சு கேட்பதும் இல்லை, என்னமோ நேரமே சரியில்லை அப்படின்னு சொல்லுபவர்கள் மேற்சொன்ன வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வரும்போது உங்களுடைய கஷ்டங்களுக்கு சீக்கிரம் ஒரு தீர்வு கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -