நவகிரகங்களும் நன்மையை தர பரிகாரம்

navakiragam navaathaniyam
- Advertisement -

நாம் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் எத்தனை ஆலயம் சென்றாலும் நவகிரகங்களின் செயல்பாடுகள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். நாம் வணங்கும் தெய்வங்களும் செல்லும் ஆலயங்களும் அவர்களுடைய அந்த தாக்கத்திலிருந்து நம்மை காக்கும். ஆனாலும் நவகிரகங்கள் தங்களுடைய பணியை எப்போதும் செய்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் தாக்கம் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமெனில் முதலில் நவகிரங்களை நாம் மகிழ்விக்க வேண்டும்.

நவகிரகங்கள் நன்மை தரக் கூடியது தீமை தரக்கூடியது பொதுவானது என்ற அனைத்து வகையான தன்மைகளும் கொண்டது தான். அதில் நன்மை தரக்கூடிய கிரகங்கள் நம்முடைய நட்சத்திரத்தில் வரும் போது நம்முடைய வாழ்வு அமோகமாக இருக்கும். அதே நேரத்தில் தீமை தரக் கூடிய கிரகங்கள் வரும் போது நாம் மிகவும் துன்பத்திற்கு ஆளாவோம். அப்படி இல்லாமல் இந்த கிரகங்களினால் எப்பொழுதும் ஒரே மாதிரியான நிலையில் வாழ இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நவகிரகங்களை மகிழ்விக்கும் பரிகாரம்

முதலில் நவகிரக வழிபாட்டை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் நவகிரக ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வருவது எப்பொழுதும் நமக்கு நல்ல பலனை தருவதாக இருக்கும். உங்களுடைய நட்சத்திரத்தில் எந்த கிரகங்களின் தாக்கம் இருக்கிறதோ அந்த கிரகத்திற்கான வழிபாடுகளை அவ்வப் போது செய்து வருவது மேலும் சிறப்புகளை தரும்

இப்போது இந்த நவகிரகங்களுக்கான பரிகாரத்தை பார்ப்போம். இதற்கு நவகிரகங்களுக்கென நவதானியங்கள் கடைகளில் கிடைக்கும். நாட்டு மருந்து கடையில் இது எளிதாக கிடைக்கும். இதில் நவதானியங்களில் தலா 50 கிராம் என வாங்கிக் கொள்ளுங்கள். இதை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு வெள்ளை நிற துணியில் கொட்டி தலையனை போல கட்டி விடுங்கள். இந்த தானியத்தை வாங்குவது கட்டுவது என அனைத்தையும் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

நீங்கள் தயார் செய்த இந்த நவதானிய மூட்டையை சனிக்கிழமை அன்று இரவு படுக்கும் போது உங்கள் தலையணை அடியில் வைத்து விடுங்கள். அதே போல் ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து நான்கு நாட்கள் நீங்கள் இரவு தூங்கும் பொழுது உங்கள் தலையணை அடியில் இந்த நவதானிய முட்டை இருக்க வேண்டும். ஐந்தாவது நாளான சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த நவதானிய மூட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை உங்கள் வீட்டில் அருகில் ஓடும் நீர் இருந்தால் அதில் மூட்டையை பிரித்து நவதானியத்தை தண்ணீரில் கொட்டி விடுங்கள். அப்படி ஏதும் இல்லாத சமயத்தில் ஏதேனும் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தின் அடியில் நவதானியத்தை உங்கள் கைகளில் கொட்டி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தண்ணீரில் நவதானியத்தை கரைத்து விடுவது போல் மரத்தின் அடியில் ஊற்றி விடுங்கள். அதன் பிறகு கை கால் முகம் அலம்பி பின்பு நவகிரகத்தை சென்று வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க தீப வழிபாடு

இந்தப் பரிகாரம் மிக மிக சக்தி வாய்ந்த அதே நேரத்தில் எளிமையான பரிகாரம் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்யும் போது நவகிரகங்கள் அனைத்தும் புரிந்து உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தாலும் பெருமளவு அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு வரக் கூடிய பெரும் பிரச்சனைகளிலிருந்தும் வெளிவரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையலாம்.

- Advertisement -