- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரியில் வாங்க வேண்டிய பொருட்கள்

நவராத்திரியில் வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

இன்று நாம் செய்யக்கூடிய இறை வழிபாடாக இருக்கட்டும், பூஜை புனஸ்காரங்களாக இருக்கட்டும், எல்லாமே நம்முடைய குடும்ப நலனுக்காக தான். குறிப்பாக நம்முடைய குடும்பம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும், ஆரோக்கியம் பெற வேண்டும் என்றுதான் இறைவனிடம் வேண்டுதல் வைக்கின்றோம்.

அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த நவராத்திரி தினத்தில் நாம் இந்த ஒரு செடியை நம் வீட்டிற்குள் கொண்டு வந்தால், நம்முடைய செல்வ செழிப்பு மற்றும் நம்முடைய ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்படும். நவராத்திரி முடிவதற்குள் நம் வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்க வேண்டிய அந்த செடி என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நவராத்திரியில் வாங்க வேண்டிய பொருட்கள்

துளசி செடிதான் அது. நிறைய பேர் வீடுகளில் இந்த துளசி செடி இருக்கிறது. உங்களுடைய வீட்டில் துளசி செடி இல்லை என்றால், இந்த நவராத்திரி தினத்தில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து, துளசி செடியை வாங்கி ஒரு தொட்டியில் வைத்து வளர்த்து வரலாம். நாளை நவராத்திரியில் வந்திருக்கும் வெள்ளிக்கிழமை. நாளைய தினம் கூட இந்த துளசி செடியை வாங்குவது என்பது உங்களுடைய குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும்.

வாங்கி வந்த செடியை அப்படியே கொண்டு வந்து வீட்டில் ஒரு மூலையில் போட்டு வைக்கக் கூடாது. தினம்தோறும் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தினம் தோறும் அந்த செடியிடம் பேச வேண்டும். உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று அந்தச் செடியிடம் சொல்லுங்கள். உங்களுடைய பிரச்சனைகளை நம்பிக்கையோடு சொன்னால், அந்த செடிக்கு கேட்கும்.

- Advertisement -

செடியில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கு கேட்கும் மகாலட்சுமி உயிரோட்டத்தோடு உங்களுடைய வீட்டில் வளர்வதை நீங்கள் பார்க்கும் போது, உங்களுடைய மனதிற்கு சந்தோஷமும் பிறக்கும். நவராத்திரி தினத்தில் அந்த செடிக்கு முன்னால் தினமும் விளக்கு ஏற்றலாம். பிறகு செவ்வாய் வெள்ளிக்கிழமையில் அந்த செடிக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு.

நீங்கள் கொலு வைத்திருந்தாலும் சரி, கொலு வைக்கவில்லை என்றாலும் சரி ஒரே ஒரு துளசி செடியை வாங்கி இந்த நவராத்திரியில் உங்கள் வீட்டில் அதை வளர்த்து வந்தாலே போதும். செல்வ செழிப்பானது பல மடங்கு உயர தொடங்கி விடும்.

- Advertisement -

செடி வாங்கக்கூடிய சூழ்நிலை இல்லை அல்லது எங்களுடைய வீட்டில் ஏற்கனவே இந்த துளசி செடி இருக்கிறது என்றால், வெள்ளி நாணயம் உங்களால் வாங்க முடியும் என்றால் வாங்கலாம். மகாலட்சுமி விநாயகர் திருவுருவப்படம் பொரித்த வெள்ளி நாணயத்தை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து இந்த நவராத்திரி ஒன்பது நாளும், அந்த வெள்ளி நாணயத்திற்கு பூஜை செய்து அந்த நாணயத்தை நவராத்திரி முடிந்தவுடன் எடுத்து பீரோவில் பத்திரப்படுத்தி வைப்பது என்பது மிக மிக நல்லது.

இந்த வெள்ளி நாணயம் இந்த நவராத்திரி நாட்களில் உங்கள் வீட்டிற்குள் வந்தால், அந்த மகாலட்சுமி தாயே உங்கள் வீட்டிற்குள் வந்ததாக அர்த்தம். கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு முடிந்தது என்று அர்த்தம். அந்த அளவுக்கு சக்தி இந்த வெள்ளி நாணயத்திற்கு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நவராத்திரியில் ஏற்ற வேண்டிய அணையாதீபம்

நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த இரண்டு பொருட்களையும் இந்த நவராத்திரி தினத்தில் வாங்கிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கும். அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகள் செல்வ செழிப்போடு மேலோங்கி வாழ்வதற்கு இந்த எளிமையான ஆன்மீகம் வழிபாட்டு முறைகளே போதுமானது.

சற்று முன்