- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரியின் நான்காம் நாள் வழிபாடு

நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாளாக திகழ்வதுதான் நவராத்திரி நாட்கள். இந்த ஒன்பது நாட்களும் அம்மனை நாம் பலவிதமான ஸ்வரூபத்தில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து முடித்து விட்டோம். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் நமக்கும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தைரியமும் வீரமும் வந்து சேரும். அடுத்ததாக வரக்கூடிய மூன்று நாட்களும் நாம் மகாலட்சுமியின் சொரூபத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அனைத்து விதமான செல்வ செழிப்புகளும் உண்டாகும்.

அந்த வகையில் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வரை மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்குரிய தினங்களாக திகழ்கின்றன. இந்த தினங்களில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறை மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து
விதமான செல்வங்களையும் பெற உதவும். அப்படிப்பட்ட மகாலட்சுமி பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு

இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் செய்ய வேண்டும். அம்மனுக்கு அன்றைய தினத்தில் கரு நீல நிறத்தால் ஆன துணியை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஜாதி மல்லி பூ மற்றும் நெல்லி இலையை பயன்படுத்தி அலங்காரம் மற்றும் அர்ச்சனைகளை செய்து கொள்ளலாம். அன்றைய தினம் அம்மனுக்கு நெய்வேத்தியமாக பட்டாணி சுண்டல், பாசிப்பயறு சுண்டல், அவல்பொரி கடலை, கேசரி போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அம்மனுக்கு முன்பாக வடக்கு திசை பார்த்தவாறு ஐந்து நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஜாதிமல்லி மற்றும் நெல்லி இலையை பயன்படுத்தி “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக அன்றைய தினத்தில் நாம் வணங்க வேண்டிய துக்கையாக பூஷ்மாண்டா துர்க்கை திகழ்கிறாள். அதனால் அவளுக்குரிய மந்திரமான “ஓம் பூஷ்மாண்டா தேவியே நமஹ” என்னும் மந்திரத்தை 54 முறை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

வழிபாட்டை நிறைவு செய்யும் வகையில் கற்பூர தீப தூப ஆராத்தி காட்டிக்கொள்ளுங்கள். வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்திருப்பவர்கள் அந்த சுமங்கலி பெண்களுக்கு தாம்பூல செட்டுடன் கருநீலத் துணியையும் பட்டாணி சுண்டலையும் கொடுத்து ஆசீர்வாதத்தை பெற்று வழி அனுப்ப வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க நிலைவாசல் பரிகாரம்

நவராத்திரி வழிபாட்டை செய்யக்கூடியவர்கள் நவராத்திரியின் நான்காம் நாள் இந்த முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய பண பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும் முக்கியமாக கடன் தொல்லை நம்மை விட்டுச் செல்லும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்