நவராத்திரியின் நற்பலன்கள்! மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைக்க, செல்வ செழிப்பான வாழ்க்கையை பெற, நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாட்டை நம் வீட்டில் எப்படி செய்வது?

mahalashmi5
- Advertisement -

நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் மலைமகள் என்று அழைக்கப்படும் துர்க்கை அம்மனை போற்றிக் கொண்டாடப்படும் தினங்களாக சொல்லப்பட்டுள்ளது. மலைமகளை அடுத்து, அலை மகளான மகாலட்சுமியை போற்றி, அடுத்து வரும் மூன்று தினங்களும் கொண்டாடப்படும். நான்காவது நாள் நம்முடைய வீட்டில் மகா லட்சுமியை போற்றி எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, மகாலட்சுமிக்கு எதற்காக அலைமகள் என்ற பெயர் வந்தது என்பதையும் இந்த நல்ல நாளில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

parkadal

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, பாற்கடலில் இருந்து அவதாரம் எடுத்தவள் மகாலட்சுமி, இதனால்தான், கடலில் இருந்து எடுக்கப்படும் எல்லா பொருட்களுக்கும் லட்சுமியின் அம்சம் நிறைந்துள்ளது என்பது  நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். வீட்டில் இருக்கக் கூடிய கல் உப்பை மகாலட்சுமி ஸ்வரூபம் என்று சொல்லப்படும் காரணமும் இது தான். மகா லட்சுமி பிறந்த கடலில் இருந்து தான், உப்பும் எடுக்கப்படுகிறது.

- Advertisement -

அலைகடலில் அவதாரம் செய்த மகாலட்சுமியை, அலைமகள் என்ற பெயர் கொண்டே அழைக்கின்றோம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நாம் எல்லோர் மனதிற்கும் பிடித்த, நம் எல்லோரது வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் இந்த மகாலட்சுமியை, நவராத்திரி தினமான நான்காவது நாள், மனமுருகி நம்பிக்கையோடு வழிபாடு செய்து அழைத்தால், நிச்சயம் அந்த மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருகை தருவாள்.

மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைக்க பச்சரிசி மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு, அதில் உங்களுடைய வீட்டு வாசலில் கோலம் இட வேண்டும். தாமரை பூ கோலம் போட்டால் மேலும் சிறப்பினை தேடித்தரும். அம்பிகைக்கு ஜாதிமல்லி அல்லது மல்லிகைப் பூவை சூட்டலாம். கொய்யா பழம் மற்றும் எல்லா காய்கறிகளும் சேர்ந்த கலவை சாதத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும்.

- Advertisement -

கருநீல வண்ணம், நவராத்திரியின் நான்காவது தினத்திற்கு, உகந்த நிறமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு அடர் நீல வண்ண வளையல்கள், ரவிக்கை துணிகளை தானமாக கொடுக்கலாம். மஞ்சள் நிறத்தில், வீட்டில் இருக்கும் பெண்கள் ஆடை அணிந்து கொள்வது சிறப்பு.

mahalakshmi

நவராத்திரியின் நான்காவது தினம் மகாலட்சுமியை நினைத்து மனமுருகி மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டுமென்று, வேண்டிக் கொண்டு, இந்த முறைப்படி உங்களுடைய வீட்டில் பூஜை செய்தால் நிச்சயம் உங்களால் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வாழ்நாள் முழுவதும் பகைவர்கள் இல்லாத வாழ்க்கையை வாழ, நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாட்டை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -