மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்குரிய மூன்று நாட்களில் ஒரு நாளாக திகழக்கூடிய செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாம் இந்த ஒரு எளிமையான வழிபாட்டு முறையை நம்முடைய வீட்டில் செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் பணவரவு அதிகரிக்கும். செய்கின்ற வேலை அல்லது தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அந்த நவராத்திரியின் ஐந்தாம் நாள் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு
நவராத்திரியின் ஐந்தாம் நாள் மகாலட்சுமி தாயாரை வைஷ்ணவி தேவியாக வழிபாடு செய்வதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் நாம் நவ துர்க்கையில் ஸ்கந்த மாதாவை வழிபாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் பஞ்சமி திதி என்பதால் வாராகி அம்மனையும் வழிபாடு செய்ய வேண்டும். இப்படி மூன்று தெய்வங்களை ஒருசேர வழிபாடு செய்வதற்குரிய ஒரு சிறப்பான வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
வைஷ்ணவி தேவியை வழிபாடு செய்வதற்கு உரிய நேரமாக மாலை 5:30 மணியிலிருந்து 11:30 மணிவரை திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் வைஷ்ணவி தேவிக்கு சிவப்பு நிற துணியை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வாசனை மிகுந்த பாரிஜாதம், மல்லிகைப்பூ, முல்லை பூ, மனோரஞ்சிதம் போன்ற பூக்களை பயன்படுத்தி அலங்காரமும் அர்ச்சனையும் செய்து கொள்ளலாம். மாதுளம் பழத்தை நெய்வேத்தியமாக வைப்பது, பூம்பருப்பு சுண்டல், தயிர் சாதம், ஏதாவது ஒரு இனிப்பு வகைகள் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
அம்மனுக்கு முன்பாக 5 நல்லெண்ணெய் தீபங்களை வடக்கு திசை பார்த்து ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வைஷ்ணவி தேவியின் மந்திரமான “ஓம் க்லீம் வைஷ்ணவி தேவியே நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறையும், “ஓம் க்ரீம் ஸ்கந்த மாதா நம” என்னும் ஸ்கந்த மாதா மந்திரத்தை 54 முறையும் கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டிற்கு வந்து சுமங்கலி பெண்களுக்கு சிவப்பு நிற ரவிக்கை துணியோடு சுண்டல், இனிப்பு வகைகள் மற்றும் தாம்பூல செட்டை கொடுத்து மனநிறைவோடு வழி அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த நாளில் இரவு 7:30 மணியிலிருந்து 8:45 மணிக்குள் பஞ்சமி தீபத்தை ஏற்றி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பஞ்சமி நாளில் எப்படி வாராகி அம்மனை வழிபாடு செய்வோமோ அதே முறையில் கிழங்கு வகைகளை வைத்து செவ்வரளி பூக்களை மாலையாக தொடுத்து வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது “ஓம் நமோ வராக தேவியே நமோ நம” என்னும் மந்திரத்தை 11 முறை கூறி பஞ்சமி தீப சுடர் ஒளியில் வாராகி அம்மனை தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ
நவராத்திரியின் 5ஆம் நாள் இந்த முறையில் அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு வருமானமும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.