- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு

- Advertisement -

ஒன்பது நாட்களும் அம்பிகையை பல முறைகளில் வழிபாடு செய்யக்கூடிய நாளாக தான் நவராத்திரி திகழ்கிறது. இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்ய வேண்டும் அந்த வகையில் புதன்கிழமை அன்று அதாவது அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும்.

புதன்கிழமை என்பது புதன் பகவானுக்குரிய கிழமை ஞானத்தை தரக்கூடிய புதன் பகவானுக்குரிய கிழமை அன்று சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் இந்த நவராத்திரியில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும்பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட முழுமையான பலனை பெறுவதற்கு சரஸ்வதி தேவியை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கு சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். சுத்தமாக ஞான சூனியமாக இருக்கக்கூடியவர்களை கூட புத்திசாலியாக மாற்றக்கூடியவர் தான் சரஸ்வதி தேவி. அப்படிப்பட்ட சரஸ்வதி தேவியை நாம் நவராத்திரியின் ஏழாம் நாள் சாம்பவியாகவும், நவ துர்க்கைகளில் காலராத்திரி தேவியாகவும் வழிபாடு செய்வோம் அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம் அல்லது 11:30 இருந்து 12 30 குள் செய்யலாம், மாலை 5:30 இருந்து 10:30க்குள் செய்யலாம்.

முடிந்த அளவிற்கு மாலை நேரத்தில் வழிபாடு செய்ய முயற்சி செய்யுங்கள். கொலு வைத்திருப்பவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் காலையில் வழிபட வேண்டும் மாலையிலும் வழிப்பட வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அம்பிகைக்கு நாம் இளஞ்சிவப்பு நிறத்திலான புடவையை சாற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. நாமும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து கொள்வது நல்ல பலனைத் தரும். அன்றைய தினம் அம்பிகைக்கு எலுமிச்சை பழ சாதம், கொண்டைக்கடலை சுண்டல் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அம்பிகையை அலங்காரம் செய்வதற்கு தாழம்பூ, பாரிஜாத பூ மற்றும் வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அர்ச்சனை செய்வதற்கு தும்பை இலையை பயன்படுத்திக் கொள்வது நல்ல பலனைத் தரும். அன்றைய தினத்தில் நாம் அம்பிகைக்கு வைக்கக்கூடிய பழமாக திகழ்வது பேரிச்சம்பழம். அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை அழைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஜாக்கெட் துணி கொடுத்து பிரசாதங்களை தந்து வழி அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் நாம் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய படிக்கும் பிள்ளைகளின் புத்தகத்தை வாங்கி வைத்து அந்த புத்தகத்திற்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் குழந்தைகள் நல்ல முறையில் படிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த புத்தகத்தை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து விட வேண்டும். இந்த வழிபாட்டில் நாம் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஓம் நமோ சாம்பவியே நமஹ

இந்த முறையில் குழந்தைகளின் புத்தகத்தை வைத்து இந்த மந்திரத்தை 108 முறை கூறி சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்வதும் அம்பிகைக்கு தும்பை இலையால் அர்ச்சனை செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கல்வி அறிவு அவர்களுக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும். நல்ல புத்திசாலித்தனத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள்.

இதையும் படிக்கலாமே:அஷ்ட தச புஜ துர்க்கை வழிபாடு

நவராத்திரியின் ஏழாம் நாள் ஒவ்வொரு வீட்டிலும் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் அந்த வீட்டில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்