அக்டோபர் மாதம் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை துர்காஷ்டமி வருகிறது. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் வரக்கூடிய ராகு காலத்தில் நாம் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதை வழக்கமாகவும் வைத்திருப்போம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் துர்க்கை அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும். எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அஷ்ட தச புஜ துர்க்கை வழிபாடு
வடமாநிலத்தில் இந்த தசரா பண்டிகை என்பது முழுக்க முழுக்க 10 நாட்களும் துர்க்கை அம்மனை மட்டுமே மையப்படுத்தி கொண்டாடப்படும் திருவிழாவாக கருதப்படுகிறது. மேலும் அந்த தசரா பண்டிகையில் அவர்கள் வழிபடும் துர்க்கை அம்மன் திகழக்கூடியவள் தான் அஷ்டதசபுஜ துர்க்கை அம்மன். இந்த அம்மன் அம்பிகையாகவும் அதேசமயம் மகாலட்சுமி ஆகவும் பாதிக்கப்படுகிறார். அதனால் தசரா பண்டிகை முழுவதுமே வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த துர்க்கை அம்மனுக்கு தான் மிகவும் சிறப்பான வழிபாட்டை செய்வார்கள். அப்படிப்பட்ட இந்த துர்க்கை அம்மனை நாம் துர்காஷ்டமி சமயத்தில் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் உண்டாகும்.
அஷ்டதச புஜ துர்க்கை என்றால் 18 கரங்களை உடைய துர்க்கை அம்மன் என்று பொருள்படும். இந்த 18 கரங்களிலும் 18 விதமான ஆயுதங்களை வைத்திருப்பாள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துர்க்கை அம்மன் தமிழ்நாட்டில் மிகவும் ஒரு சில கோவில்களில் மட்டுமே வீற்றிருக்கிறாள். முடிந்தவர்கள் அந்த ஆலயத்திற்கு சென்று துர்க்கை அம்மனுக்கு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை வாங்கி தானமாக தந்து வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி அஷ்ட தச பூஜ துர்க்கை அம்மன் இல்லாத பட்சத்தில் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்றும் இந்த முறையில் வழிபாடு செய்யலாம்.
தொழிலில் பிரச்சனை, கடன் பிரச்சனை என்று வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டு இருப்பவர்கள். இந்த துர்காஷ்டமி நாளில் துர்க்கை அம்மனுக்கு இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய புடவையை வாங்கி தானமாக தர வேண்டும். அவர்களும் அதே நேரத்தில் உடையை அணிந்திருக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மரிக்கொழுந்து, அரளிப்பூ, மல்லிகை பூ, தாமரைப் பூ போன்றவற்றை வாங்கி துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதோடு அன்றைய நாளில் கோதுமையால் செய்யப்பட்ட பொருட்களை பைரவருக்கு தானமாக தருவதன் மூலமும் நம்முடைய கர்ம வினைகள் நீங்க பெற்று கடன் பிரச்சினையில் இருந்து முற்றிலும் விடுபடுவோம்.
வீட்டில் ஏதோ எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது, யாரோ நமக்கு கெடுதல் செய்து விட்டார்கள், எந்தவித முன்னேற்றமும் இல்லை, எந்த நன்மையும் நடக்கவில்லை, தொட்டது எதுவும் வெற்றிகரமாக முடியவில்லை என்று புலம்புபவர்கள், வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களான ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் துர்காஷ்டமி நாளன்று அருகில் இருக்கக் கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அன்றைய நாளில் அங்கு சண்டி ஹோமம் நடைபெறும். அந்த சண்டி ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த ஆலயத்திற்கு சேவலை காணிக்கையாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் அவர்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஏவல் பில்லி சூனியம் போன்ற அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:11-10-2024 துர்காஷ்டமி வழிபாடு
சக்தி வாய்ந்த நாளாக கருதக்கூடிய துர்காஷ்டமி நாளன்று நம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றி துர்க்கை அம்மனை மனதார வழிபாடு செய்ய வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.