இன்றைய தினம் நவராத்திரியின் எட்டாவது நாள். இந்த நாளை துர்கா அஷ்டமி என்று சொல்லியும் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இன்று மாலை துர்க்காஷ்டமி திதியானது பிறந்து விடுகிறது. இன்று மாலை உங்களுடைய வீட்டில் வழக்கம் போல பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, துர்க்கை அம்மனை நினைத்து நிலை வாசலில் குங்குமத்தில் இந்த சின்னத்தை வரைந்து, இந்த மந்திரத்தை 27 முறை சொன்னால் போதும்.
வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் தலைதெறிக்க வெளியே ஓடிவிடும். நல்ல சக்தி வீட்டிற்குள் குடியேறும். பிறகு வாழ்க்கையில் நீங்கள் வெற்றி மேல் வெற்றிவாகை சூட அந்த அம்பாளே உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்கி அருள் ஆசியை வழங்கிக் கொண்டிருப்பாள். இன்று மாலை நீங்கள் வீட்டில் செய்ய வேண்டிய அந்த எளிமையான பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
துர்காஷ்டமி துர்க்கை வழிபாடு
இன்று மாலை நிலை வாசல் கதவில் குங்குமத்தில் நீங்கள் வரைய வேண்டிய சின்னம் ஸ்வஸ்திக் சின்னம். அம்பாள் கையில் இந்த சின்னம் இருக்கும். விநாயகரது கையில் இந்த சின்னம் இருக்கும். வடநாட்டவர்களின் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சின்னமே இந்த ஸ்வஸ்திக் சின்னம் தான். பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள். கொஞ்சமாக கிண்ணத்தில் குங்குமத்தை போட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கரைத்த குங்குமத்தை வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டு நிலை வாசல் கதவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். இன்று வரைந்த சுவஸ்திக் சின்னம் வெள்ளி, சனிக்கிழமை உங்கள் வீட்டில் அப்படியே இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அந்த சின்னத்தை துடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத பூஜைக்கு விஜயதசமிக்கும் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை இந்த சின்னமானது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த சின்னத்தை வரைந்து துர்க்கை அம்பாளை மனதார நினைத்து வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேற வேண்டும், வீட்டிற்குள் துஷ்ட சக்தி நெருங்கக் கூடாது என்று பிரார்த்தனை வைத்துக்கொண்டு, பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை 27 வரி சொல்லுங்கள். இது வெற்றி வாகை சூட உதவக்கூடிய மந்திரம்.
வெற்றி தரும் அம்பாள் மந்திரம்
சகல காரிய ஜெயப்பிரதே ஜெய ஜெய !
வீட்டில் நீங்கள் மேற்கொள்ளும் சகல காரியங்களும் ஜெயமாக இந்த ஒரு வரி மந்திரம் போதும். சகல காரியங்களை ஜெயம் ஆக்கக்கூடிய அம்பிகைக்கு, ஜெயம் உண்டாகட்டும். இதுதான் இந்த மந்திர வரியின் அர்த்தம். நவராத்திரியின் எட்டாவது நாளான இன்று மாலை எவர் ஒருவர் வீட்டில் நிலை வாசல் படியில் குங்கும நிறத்தில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு இருக்கிறதோ, அந்த வீட்டிற்குள் துர்க்கை அம்மன் நிச்சயம் வருகை தருவாள்.
இதையும் படிக்கலாமே: 11-10-2024 ஆயுத பூஜை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மேலே சொன்ன மந்திரம் இன்று எந்த வீட்டில் உச்சரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில் வெற்றி மேல் வெற்றி ஆனது வந்து குவியும். அதிலும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேல் சொன்ன வழிபாடு நிச்சயம் 100% பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.