- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு

- Advertisement -

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதற்குரிய நாட்கள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் நவராத்திரியின் எட்டாம் நாள் சரஸ்வதி தேவியை நரசிம்ம தாரணி ஆக வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் நவ துர்கைகளில் மகாகௌரி ஆகவும் வழிபாடு செய்ய வேண்டும். இவர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு

நவராத்திரியின் எட்டாம் நாள் சரஸ்வதி தேவியை நரசிம்ம தாரணியாக நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பகை முற்றிலும் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் துரோகிகளின் தொல்லையிலிருந்து விடுபட முடியும். நம்முடைய மனம் தெளிவடையும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிறந்த ஞானத்தை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் பெறுவதற்கு செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மாலை 5:30 மணியில் இருந்து 11:30 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் அம்மனை பச்சை நிற துணியால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ரோஜாப்பூ, மருதாணி இலை போன்றவற்றை பயன்படுத்தி அலங்காரங்களையும் அர்ச்சனைகளையும் செய்து கொள்ளலாம். நெய்வேத்தியமாக பச்சை திராட்சையுடன் பால் சாதம், பால் பாயாசம், மொச்சை சுண்டல் போன்றவற்றை வைக்க வேண்டும். மாலை 5:30 க்கு மணிக்கு மேல் வீட்டில் இருக்கக்கூடிய அம்மனின் படத்திற்கு முன்பாகவோ அல்லது கலசத்திற்கு முன்பாகவோ 5 அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வடக்கு திசை பார்த்தவாறு வைத்து மேற்சொன்ன பிரசாதங்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

பிறகு சரஸ்வதி தேவியின் மந்திரமான “ஓம் நரசிம்ம தாரணி நமக” என்னும் மந்திரத்தை 108 முறையும் துர்க்கை அம்மனின் மந்திரமான “ஓம் மகாகௌரி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை 48 முறையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு பச்சை நிற துணி, திராட்சை, பால் பாயாசம் போன்றவற்றை தருவதோடு மாங்கல்ய செட்டையும் சேர்த்து தருவதன் மூலம் அனைத்து விதமான நற்பலன்களையும் பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சப்த கன்னியர் மந்திரம்

மனத் தெளிவுடனும் பகைவர்களையும் எதிரிகளையும் விரட்டி அடிக்க கூடிய மிகவும் எளிமையான இந்த பூஜையை நவராத்திரியின் எட்டாம் நாள் செய்து நற்பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்