- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரி தியான வழிபாடு

நவராத்திரி தியான வழிபாடு

- Advertisement -

முப்பெரும் தேவியரை வழிபாடு செய்து அவர்களின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு உகந்த நாட்களாக திகழக்கூடியவை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி ஆகும். வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரிகள் வந்தாலும் இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி தான் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இந்த நவராத்திரியை தான் பலதரப்பட்ட பெண்களும் தங்களுடைய இல்லத்தில் திருவிழா போல நடத்துவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியில் கொலு வைக்காமல் கலசம் வைக்காமல் தினமும் தியானம் மட்டுமே செய்து முப்பெரும் தேவியரின் அருளைப் பெறுவதற்குரிய வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவராத்திரி தியான வழிபாடு

நவராத்திரி என்றதும் நமக்கு கொலு பொம்மைகள் தான் ஞாபகத்திற்கு வரும். பலரும் கொலு படிக்கட்டு அமைத்து அதற்கு மேல் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அதே போல் ஒரு சிலர் கலசம் வைத்து அந்த கலசத்தையே தெய்வமாக பாவித்து அதற்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ கலசமும் வைக்காமல் கொலுவும் வைக்காமல் வீட்டில் இருக்கக் கூடிய அம்மன் படத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். இது தவிர்த்து அகண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் முறையும் இருக்கிறது. இவை எதுவுமே செய்ய இயலாது ஆனால் நவராத்திரி விரதத்தின் பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய தியான வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த தியான வழிபாட்டை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நாம் மேற்கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் செய்வது தான் மிகவும் சிறப்பு. இந்த ஒன்பது நாட்களும் தியான வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சாதாரணமாக தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளலாம். பிறகு மாலை 5:30 மணிக்கு மேல் திரும்பவும் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த தியானத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த தியானத்தை 9 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும். நாம் ஏற்றி வைத்திருக்கும் அந்த தீபச்சுடரொளியை தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கண்ணிமைக்காமல் பார்க்க வேண்டும். பிறகு கண்களை மூடி மூச்சை மெதுவாக உள் இழுத்து வெளியே விட்டு அந்த தீபச்சுடர் ஒளியில் துர்க்கை அம்மன் இருப்பது போல் மனதிற்குள் கற்பனை செய்து கொள்ள வேண்டும். பிறகு “ஓம் ஸ்ரீம் துர்கையே நமஹ” என்னும் மந்திரத்தை மனதிற்குள் நிறுத்தி நிதானமாக கூறிக் கொண்டே துர்க்கை அம்மனை மனக்கண்ணில் தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி ஆறு நிமிடங்கள் தியானம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி தியான வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இப்படி நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைத்து அந்த நாட்களுக்குரிய அம்பிகையை மணக்கண்ணிற்கு கொண்டுவந்து தியானம் செய்பவர்களுக்கு கொலு வைத்து வழிபாடு செய்த பலனை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: நவராத்திரி முதல் நாள் வழிபாடு

எளிமையான இந்த தியான வழிபாட்டை அம்மனை மனதார நினைத்து முழு மனதோடு ஆத்மார்த்தமாக செய்பவர்களுக்கு அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்