நிறைய பெற்றவர்களின் கவலையே, தங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்கவில்லை என்பதுதான். எவ்வளவுதான் படித்தாலும் மண்டையில் படிப்பு ஏறவில்லை, மக்காகவே இருக்கிறார்கள் என்று சில பேர் திட்டுவார்கள். எந்த பிள்ளையும் மக்கு கிடையாது. அந்தந்த பிள்ளைகளுக்கு என்று ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கத்தான் செய்யும். அந்த தனித் திறமையில் அவர்கள் வல்லவர்களாக நிச்சயம் வருவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
இருப்பினும் அடிப்படை தேவைக்காகவாவது, படிப்பறிவு ஒரு பிள்ளைக்கு தேவை. அப்படி உங்களுடைய பிள்ளைக்கும் நல்ல படிப்பு, அறிவு தேவை என்றால் பின் சொல்ல கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய பிள்ளையின் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
பிள்ளைகளுடைய படிப்பு அறிவு திறமை இதற்கெல்லாம் காரணம் புதன் பகவான் தான். புதன் பகவானுக்கு உரிய சமித்து என்றால் அது நாயுருவி குச்சி. இது ஒரு செடி வகையை சேர்ந்தது. நாட்டு மருந்து கடைகளில் போய் கேட்டாலே கொடுப்பார்கள். அந்த குச்சிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் வேப்பங்குச்சியில் அந்த காலத்தில் எல்லாம் பல் தேய்ப்பார்கள், அதேபோல உங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த நாயுருவி குச்சியை கொண்டு பல் தேக்க சொல்லுங்கள். அந்த நாயுருவி குச்சியின் மேலே கொஞ்சமாக பேஸ்ட் தடவி விட்டு கூட இந்த குச்சியை பயன்படுத்தி பல் தேய்த்தால், படிக்காத பிள்ளைகளும் நன்றாக படிக்கும் என்பது ஜோதிடத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
இது பெரிய அளவில் செய்யக்கூடிய பரிகாரம் அல்ல. மிக மிக எளிமையான பரிகாரம்தான். நாமும் இதை பின்பற்றி பார்ப்போமே. படிக்காத பிள்ளைகள் நன்றாக படித்தால் அதில் பெற்றவர்களுக்கு நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும். சில பேருக்கு பிடித்த படிப்பை படிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும்.
நன்றாக திறமை இருந்தும், குறிப்பிட்ட அந்த படிப்பு இவர்களுக்கு கிடைக்காது. எட்டாக்கனியாக இருக்கும் பட்சத்தில், திறமைகள் சில மாணவர்களிடத்தில் இருந்தும் வீணாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களும் இந்த நாயுருவி குச்சியை கொண்டு பல் தேய்க்க மனதிற்கு பிடித்தபடி படிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று மாதம் செய்து பாருங்கள். குறைவான மதிப்பு எடுத்து, தேர்ச்சி பெற கூட முடியாத நிலையில் இருக்கும் பிள்ளை, அந்த பாடத்தை படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் அளவுக்கு நல்ல முன்னேற்றத்தை உங்களால் நிச்சயம் காண முடியும்.
இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்
உங்களுடைய பிள்ளைகளின் புத்தக பையில் எப்போதும் ஒரு ஹயக்ரீவரின் திருவுருவப்படத்தை வையுங்கள். ஹயக்ரீவர் ஞானத்தில் சிறந்தவர். கல்வியை கொடுக்கக் கூடியவர். அந்த படத்தை பிள்ளைகள் திரும்பத் திரும்ப பார்க்கும் போது, அவர்களுக்கு தானாகவே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.