- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஞாயிற்றுக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்

ஞாயிற்றுக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்

- Advertisement -

கைநிறைய சம்பாதிக்க வேண்டும், குடும்பத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்ய வேண்டும், செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மனிதனுடைய கனவாகவும் இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை இறைவன் இந்த பிரார்த்தனைக்கு மட்டும் செவி சாய்ப்பதே இல்லை.

வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, குடும்பத்தில் வறுமை, இதை தான் மீண்டும் மீண்டும் நாம் சந்தித்துக் கொண்டே இருக்கின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றால், வழக்கத்தை விட கூடுதல் உழைப்பை போட வேண்டும். கூடுதலாக வேலை செய்ய நேரத்தை செலவு செய்ய வேண்டும், இருந்தும் எனக்கு கஷ்டம் விலகவில்லை.

- Advertisement -

எவ்வளவு தான் உழைத்தாலும் இந்த பணம் காசு என்பது அதிகமாக வருவது கிடையாது. 10 மணி நேரம் உழைத்தும் 100 ரூபாய் மட்டும் சம்பாதிப்பவன், இந்த பூமியில் தான் இருக்கின்றான், 10 நிமிடத்திற்கு 100ரூபாய் வரை சம்பாதிப்பவர்களும் இந்த பூமியில் தான் இருக்கிறார்கள். கடவுள் ஏனோ இந்த ஏற்றத்தாழ்வை ஓரளவுக்கு கூட சீர் செய்வது கிடையாது. கேட்டால் கர்ம வினை என்று சொல்லுவார்கள்.

என்ன செய்வது நமக்கான தலையெழுத்து இது என்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். கவலைப்படாதீங்க உங்களுடைய தலையெழுத்தும் மாறும். கஷ்டங்களை எளிமையாக தீர்க்க ஒரு சில ஆன்மீக வழிபாடுகள் உள்ளது. உங்களுடைய முயற்சிகளோடு இந்த வழிபாடு சேரும்போது நிச்சயம் வாழ்வில் உங்களுக்கு பிரச்சனைகள் தீரும். வெற்றியும் கிடைக்கும். உங்கள் துன்பத்தைத் தீர்க்க வந்திருக்கும் ஒரு எளிமையான வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விநாயகர் வழிபாடு இது.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். இரண்டு மண் அகல் விளக்குகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுதிரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பிள்ளையார் கோவிலுக்கு வெளியிலேயே மூன்று தொகுப்பு கரணம் போட்டுவிட்டு, பிறகு பிள்ளையார் கோவிலுக்குள் செல்லுங்கள்.

பிள்ளையாருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து, உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் கால் வலிக்கும் அளவுக்கு பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். நம்மை வருத்திக்கொண்டு நாம் செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாடு நமக்கு பெரிய அளவில் பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், லேசாக உங்களை வருத்திக்கொண்டு இந்த வலம் வரக்கூடிய வழிபாட்டை மட்டும் நிறைவு செய்துவிட்டு, பிள்ளையார் கோவிலில் நமஸ்காரம் செய்து கோவிலிலேயே அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். கொஞ்சம் நேரம் எடுக்கும். 20 நிமிடம் எடுக்கட்டும். கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லும் போது நம்முடைய கர்ம வினைகள் எல்லாம் கரைந்து, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகி விடும் என்பதுதான் நம்பிக்கை. நீங்கள் விநாயகர் கோவிலில் சொல்ல வேண்டிய அந்த மந்திரம் இதோ.

விநாயகர் மந்திரம்

ஹரி ஓம் கணபதியே வா வா
வாக்குள்ள கணபதியே வா வா
வடிவுள்ள கணபதியே வா வா
சகல புத்தியும் சகல சித்தியும்

உனது வசமானால் போல
எனது வசமாக சிவா
ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும்
கிலியும் ஐயும் விக்ன விநாயகா ஸ்வாஹா

இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு நிலம் வாங்க வழிபாடு

வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, வீடு திரும்புங்கள். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் எல்லோருக்கும் விடுமுறை நாளாக தான் இருக்கும். நிச்சயம் இந்த வழிபாட்டிற்கு நேரம் கிடைக்கும். காலையில் 6:00 மணிக்கே விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை நிறைவு செய்து பாருங்கள். ஒரு சில வாரங்களில் உங்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் ஆன்மீகம் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்