நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இது. கழுத்தை சுற்றி இருக்கும் கருப்பு, அக்குள் பகுதியில் இருக்கும் கருப்பு, கைமுட்டி கால் முட்டியில் இருக்கும் கருப்பு, சில பேருக்கு தொடை இடுக்குகளில் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கும். என்ன செய்தாலும் அந்த கருப்பு நிறம் மறையவே மறையாது. பார்ப்பதற்கே மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தரும் படி தான் இருக்கும். இதற்கான ரெமிடியை வெளியில் யாரிடம் ஆவது கேட்க வேண்டும் என்றாலும் நமக்கு கொஞ்சம் கூச்சம் இருக்கும். அதிக பணம் உள்ளவர்கள் பியூட்டி பார்லருக்கு சென்று ட்ரீட்மென்ட் செய்து இதை சரி செய்து கொள்ளலாம். ஆனால் குறைந்த செலவில் வீட்டிலிருந்தபடியே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு அழகு குறிப்பு உள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தொடை இடுக்குகளில், கழுத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்க:
கடலை மாவு 2 ஸ்பூன், பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன், தக்காளி பழத்தின் சாறு 2 டேபிள் ஸ்பூன், கெட்டியான தயிர் 2 டேபிள் ஸ்பூன். இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்தால் ஒரு பேக் கிடைத்திருக்கும். இதை நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய கருமை நிறம் படிந்த சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். எந்த இடத்தில் கருமை நிறம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறதோ (கழுத்து, அக்குல் பகுதி, முட்டி, தொடை பகுதியில் இடுக்கில்), அந்த இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் நன்றாக காய்ந்த பிறகு நீங்கள் அப்படியே தூங்க செல்லலாம்.
மறுநாள் காலை எழுந்து வழக்கம் போல குளித்து விடுங்கள். பேக் சுத்தமாக போய்விடும். அதன் பிறகு எந்த இடத்தில் கருப்பு நிறமாக இருக்கிறதோ, எந்த இடத்தில் நீங்கள் பேக் போட்டீங்களோ, அந்த இடத்திற்கு மேல் தேங்காய் எண்ணெயை நன்றாக தடவி விட்டு விடுங்கள். மீண்டும் அடுத்த நாள் இரவு தூங்க செல்லும் போது இதே போல இந்த குறிப்பை பின்பற்றி வர வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் இதை செய்தாலே உங்களுக்கு இருக்கக்கூடிய சரும பிரச்சனை படிப்படியாக சரியாவதை உணரலாம்.
இரவு முழுவதும் இந்த பேக்கை எங்களால் போட்டுக் கொள்ள முடியாது என்பவர்கள் நீங்கள் குளிக்க செல்வதற்கு முன்பு இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். 1/2 மணி நேரம் பேக் நன்றாக காய்ந்ததும் குளிக்கும் போது அந்த பேக்கை நன்றாக ஸ்கிரப் செய்து குளித்துவிட்டு வரவேண்டும்.
பிறகு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் 7 நாட்கள் மட்டும் இதை தொடர்ந்து சருமத்தில் போடனும், அதன் பிறகு நிறுத்திவிடுங்கள். பிறகு வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ தான் இந்த பேக்கை பயன்படுத்தி வர வேண்டும். இதில் நாம் பேக்கிங் சோடா சேர்த்திருக்கின்றோம். தினமும் இதை சருமத்தின் மேல் போடும்போது ஏதாவது சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்கலாமே: முடி கொட்டிய இடத்தில், 30 நாட்களில் புது முடி வளர்வதை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்குதா? புது புது முடிகளை சீக்கிரம் வளர வைக்கும் சூப்பரான பவர்ஃபுல்லான ஹேர் பேக் இதோ!
ஆனால் பேக்கிங் சோடா சேர்க்கும் போது தான் அந்த கருமை நிறம் சீக்கிரம் நீங்கும். பேக்கிங் சோடா சில பேருடைய சருமத்திற்கு செட்டாகாது என்றால், பேக்கிங் சோடாவுக்கு பதில் உருளைக்கிழங்கு சாறு இதில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பேக்கிங் சோடா சேர்த்து பேக் தயார் செய்யும் போது அதை முகத்தில் நீங்கள் அப்ளை செய்ய வேண்டாம். இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.