முடி உதிர்வு குறைந்து நீளமான முடி வளர வேண்டுமா? அப்பொழுது நமது முன்னோர்கள் பின்பற்றிய இந்த எளிய குறிப்பை தவறாமல் உபயோகித்து பயன்பெறுங்கள்

- Advertisement -

இன்றைய சமூகத்தில் ஆண், பெண் இருவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகமாக இருப்பதாகவும் இருக்கலாம். ஆண், பெண் இருவருமே தினமும் வெகு தூரம் பயணித்து வேலைக்கு சென்று வரும் பொழுது சுற்றுச்சூழல் மாசுட்டினாலும், வேலை பளுவினால் உண்டாகும் மன அழுத்தம் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த முடி உதிர்வு பிரச்சினையிலிருந்து விடுபட்டு பட்டுப்போன்ற முடியைப் பெறுவதற்கான ஒரு எளிய வழிமுறையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

shedding-hair1

தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு – 3 ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், சாதம் வடித்த தண்ணீர் – ஒரு டம்ளர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் பச்சை பயிறு எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சாதத்துடன் உப்பு சேர்க்காமல் வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவேண்டும். அதிலிருந்து மூன்று ஸ்பூன் தண்ணீரை பச்சை பயிறு மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும். அதாவது முதல் நாள் காலை ஊற வைத்தால் மறுநாள் காலை வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும்.

pacha-payaru

இவ்வாறு 24 மணி நேரம் ஊறிய கலவையை மறுநாள் எடுத்து பார்த்தோம் என்றால் அதில் நன்றாக முளைகள் வந்திருக்கும். இவ்வாறு முளைவிட்ட பயறு வகைகளை பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு வடித்த கஞ்சி தண்ணீரையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின் தலை முடியில் லேசாக தேங்காய் எண்ணெய் தடவி விட்டு, அதற்குப் பின்னால் இந்த கலவையை முடிகளின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தேய்த்து விட வேண்டும். ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் அப்படியே தலையில் ஊறவைத்து விட்டு, அதன் பிறகு ஏதேனும் மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கொட்டும் பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்வுக்கு வந்துவிடும். அதுமட்டுமல்லாமல் கூந்தல் மிகவும் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆரம்பிக்கும்.

hair

பயன்கள்:
பச்சை பயிரில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் முடி வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து முடி உதிர்வை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொடுகு, பேன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

hair-color1

வெந்தயம் உடல் சூட்டினை குறைத்து முடி உதிர்வை தவிர்த்து நீளமான முடி வளர துணை புரிகிறது. அத்துடன் முடி மிருதுவாகவும், அழகாகவும் இருப்பதற்கும் உதவுகிறது. நமது முன்னோர்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவர்கள் பின்பற்றி வந்த ரகசிய வழி முறை தான் இது. இதனை நீங்களும் வீட்டில் முயற்சித்து பயன்பெறுங்கள்.

- Advertisement -