வேப்பிலையை வைத்து இவ்வளவு விஷயம் பண்ண முடியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

neem-veppilai
- Advertisement -

வேப்பிலை மிகச் சிறந்த மூலிகையாக இருந்தாலும் பெரும்பாலும் இதன் பயன்பாடு என்னவோ குறைவாக தான் இருக்கிறது. வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் வேறு எந்த ஒரு இலை வகைகளிலும் இல்லை என்பது தான் இதில் வியப்பிற்குரிய விஷயமாக இருக்கிறது. தினமும் வேப்பிலை சாறு சிறிதளவு குடிப்பவர்களுக்கு இயற்கையாகவே உடலில் இருக்கும் நிறைய வியாதிகள் நீங்கும். எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான பூச்சிக் கொல்லியாக இருக்கும் வேப்பிலை வேறு எந்த வழிகளில் நம்முடைய வீட்டில் உபயோகமாக பயன்படுத்த முடியும்? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Neem

வேப்பிலையில் இருக்கும் மகத்துவம் ஆன்மீக ரீதியாகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படியான வேப்பிலையில் வீட்டில் இருக்கும் கொசு மற்றும் பூச்சிகளை விரட்டி அடிக்கும் தன்மையுள்ளது தெரியுமா? இரண்டு கைப்பிடி அளவிற்கு வேப்பிலையை எடுத்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்து இந்த விழுதை சூடு படுத்திய தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கு ஏற்றும் எண்ணெயில் போட்டு கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

கொதிக்கும் எண்ணெயில் வேப்பிலையை போடும் பொழுது அடுப்பை குறைவாக வைத்துக் கொள்வது நல்லது. படபடக்கும் ஓசை நின்றவுடன் அடுப்பை அணைத்து எண்ணையை ஆற விடுங்கள். பின்னர் இந்த எண்ணெயை வடிகட்டி அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் அடைத்து அல்லது அகல் விளக்கில் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இதனுடைய வாசத்திற்கு வீட்டிலிருக்கும் பூச்சிகளும், கொசுக்களும் தலை தெறிக்க ஓடி விடும்.

heating-oil

கொசு விரட்டிகாக நாம் எவ்வளவோ விஷயங்களை வீட்டில் பயன்படுத்தி பார்க்கிறோம். ஆனால் கொசு மட்டும் ஒழிந்த பாடில்லை. அதற்கு பதிலாக நம்முடைய உடம்பில் தான் நமக்கு தெரியாமலேயே பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதற்கு மிகச்சிறந்த வழியாக வேப்பிலை நமக்கு கை கொடுக்கும். இரண்டு கைப்பிடி அளவிற்கு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் 150ml அளவிற்கு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதனை வடிகட்டி எடுத்துக் கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும், ஒரு டீஸ்பூன் கற்பூரமும் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தும் மஸ்கிட்டோ லிக்விட்டிற்கு பதிலாக அதனுள் ஊற்றி உபயோகப்படுத்தி பாருங்கள். பத்து நாட்கள் வரை கொசு தொல்லையே உங்கள் வீட்டில் இருக்காது.

mosquito-repellent1

வடிகட்டிய பின் அதில் மீதமிருக்கும் சக்கையை தூக்கிப் போடாமல் அதிலேயும் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பூச்சிகள் வரும் இடத்தில் எல்லாம் வைத்து விட்டால் போதும். ஒரு பூச்சி கூட அதனருகே நெருங்காது. குறிப்பாக சமையல் அறையில் உலாவிக் கொண்டிருக்கும் கரப்பான் தொல்லைகளும், எறும்புகளும் கூட இந்த வாசத்திற்கு வரவே வராது. ஆங்காங்கே மூலை முடுக்குகளில் எல்லாம் தேவையான இடத்தில் போட்டு விடுங்கள். பூச்சிகள் தொல்லை இன்றி நிம்மதியாக இருக்கலாம். இவ்வகைகளிலும் வேப்பிலையை நாம் வீட்டில் மிகவும் உபயோகமாக பயன்படுத்தலாம் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல இருக்க இந்த 3 பொருளை சேர்த்து கலந்து, முகத்தில் ஒரு வாட்டி ஃபேஸ் பேக் போட்டு பாருங்களேன்! உங்க முகம் டக்குனு பளபளப்பா மாறிடும்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -