- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் நெய்வேத்தியம்

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் நெய்வேத்தியம்

- Advertisement -

ஒவ்வொரு ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும், ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்னும் பட்சத்தில் அதற்கான முயற்சிகளை செய்வதோடு நம்முடைய இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்திடம் அது நடக்க வேண்டும் என்பதற்காக கோரிக்கையும் வைப்போம். அப்படி வைத்த கோரிக்கை நடக்காமல் இருக்கும் பட்சத்தில் அதில் நீண்ட நாட்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில் விநாயகப் பெருமானுக்கு உகந்த இந்த நாளில் இந்த ஒரு பொருளை நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்ய அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும். இந்த வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோரிக்கையை நிறைவேற்றும் நெய்வேத்தியம்

அனுதினமும் நாம் இறைவழிபாட்டில் ஈடுபடுகிறோம். நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய விளக்கை ஏற்றி வைத்து நம்முடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் ஊதுவத்தி ஏற்ற வேண்டும், தூபம் போட வேண்டும், கற்பூரம் ஏற்ற வேண்டும். இதோடு சேர்த்து ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். இப்படி வைத்து நாம் வழிபாடு செய்தால் தான் அந்த வழிபாட்டிற்குரிய பலனை நம்மால் பெற முடியும். நம்மால் எதை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்தாலும் அதை முழுமனதோடு செய்யும் பொழுது இறைவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

அந்த வகையில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கக்கூடிய கோரிக்கை நிறைவேறுவதற்கு விநாயகப் பெருமானுக்கு நாம் நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டிய பொருள் தான் பேரிச்சம்பழம். அதிலும் உலர் பேரிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்தோம் என்றால் விநாயகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்துவிடும். இந்த வழிபாட்டை பங்குனி மாதத்தில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றும் செய்யலாம். அதற்கு மறுநாளான புதன்கிழமையும் செய்யலாம். விநாயகப் பெருமானுக்கு புதன்கிழமை உகந்த கிழமை என்பதால் அந்த நாளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு நமக்கு 89 எண்ணிக்கையில் பேரிச்சம்பழம் வேண்டும். இதை ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு செல்லுங்கள். இந்த வழிபாட்டை காலையிலும் செய்யலாம் மாலையிலும் செய்யலாம். தங்களுடைய வசதிக்கேற்ப பார்த்துக் கொள்ளுங்கள். விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு இரண்டாக விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த 89 பேரிச்சம் பழங்களையும் விநாயகர் பெருமானுக்கு முன்பாக வைத்து உங்களுடைய எந்த கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கிறதோ அந்த கோரிக்கையை கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த பேரிச்சம் பழங்களில் இருந்து 9 பேரிச்சம் பழங்களை மட்டும் எடுத்து ஆலயத்திலேயே வைத்துவிட்டு மீதம் இருக்கக்கூடிய 80 பேரிச்சம்பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு வீட்டு பூஜை அறையில் விநாயகர் பெருமானுக்கு முன்பாக இரண்டு அகல்விளத்தில் தேங்காய் எண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து நாம் எடுத்து வந்த அந்த 80 பேரிச்சம் பழங்களையும் ஒரு தட்டிலோ அல்லது இலையிலோ வைத்து மறுபடியும் அதே கோரிக்கையை கூறி விரைவில் நிறைவேற வேண்டும் என்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த 80 பேரிச்சம் பழங்களையும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதிலிருந்து ஒரு பேரிச்சம் பழத்தை எடுத்து உண்ண வேண்டும். அப்படி உண்பதற்கு முன்பாக எந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டுதல் வைத்தோமோ அந்த கோரிக்கை நிறைவேறிவிட்டது விநாயகப் பெருமானுக்கு நன்றி என்று கூறிய பிறகு உண்ண வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 80 நாட்களும் அந்த பேரிச்சம் பழத்தை உண்டு முடிப்பதற்குள் எந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டுதல் வைத்தோமோ அது நிறைவேறும், நிறைவேறுவதற்குரிய வழியும் கிடைக்கும்

இதையும் படிக்கலாமே:அங்காரகச் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

ஆரோக்கியமான பொருட்களில் ஒன்றாக திகழக்கூடிய பேரிச்சம் பழத்தை இந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய நம்முடைய கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்