- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற

நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற

- Advertisement -

சனிக்கிழமை என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வங்களுள் முதன்மையானவராக திகழ்பவர் சனீஸ்வர பகவான். அவரின் தாக்குதலில் இருந்து வெளியே வருவதற்காக அடுத்து நம் நினைவிற்கு வரக்கூடியவர் ஆஞ்சநேயர். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதோடு நவகிரகங்களின் அருளையும் பெற முடியும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் நிறைவேறாத வேண்டுதல்களும் நிறைவேறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற

ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் திகழ்கிறது. அதிலும் நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு கிழமையிலும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். எந்த கிழமையாக இருந்தாலும் முழு மனதோடு ராமா என்று கூறி ஆஞ்சநேயரை வழிபட்டாலும் நமக்கு அதற்குரிய பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு வேண்டுதல் நிறைவேறவில்லை அதற்காக பலவிதமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்துவிட்டோம். இருப்பினும் அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்று புலம்புபவர்கள் பங்குனி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை செய்தால் போதும்.

- Advertisement -

பங்குனி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்குள் இந்த வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்று 108 எண்ணிக்கையில் வெற்றிலைத்தான். எந்த ஒரு வேண்டுதல் நிறைவேறவில்லையோ அந்த வேண்டுதலை முழுமனதோடு நினைத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிற நூலில் 108 வெற்றிலைகளையும் வைத்து மாலையாக கட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் வெற்றிலையை வைத்து மாலை கட்டும் பொழுது நம்முடைய வேண்டுதலை கூறிக் கொண்டே கட்ட வேண்டும்.

இப்படி 108 வெற்றிலையையும் மாலையாக கட்டிய பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயருக்கு இதை சாற்ற வேண்டும். பிறகு கடுகு எண்ணெயை பயன்படுத்தி இரண்டு தீபங்களை ஆஞ்சநேயருக்கு ஏற்றி வைத்து ராமா ராமா என்று கூறி 11 முறை ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும். பிறகு வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பிறரிடம் பேசலாம். அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது. இப்படி பங்குனி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் எப்பேற்பட்ட நிறைவேறாத வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் ஆஞ்சநேயரின் அருளால் விரைவில் நிறைவேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:முருகன் வீடு தேடி வர

மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை பங்குனி மாதத்தின் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை நினைத்து செய்ய நிறைவேறாத வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்