பக்கத்து வீட்டுக்காரங்க தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படின்னா வீட்டு வாசலில் இதை கட்டி வைத்து விடுங்கள்! தொல்லை ஒழிந்து நிம்மதியாக இருக்கலாம்.

neighbour-vinayagar

ஒரு சில இடங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சதா தொல்லை கொடுத்துக் கொண்டே நம்முடைய நிம்மதியை இழக்க செய்வார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள், இந்த தொல்லைக்காகவே பல வீடுகளை மாற்றியிருக்கலாம். நீங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எளிதாக வீட்டை மாற்றி விட்டீர்கள்! சொந்த வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களால் வீட்டையும் மாற்ற முடியாது, இந்த தொல்லையில் இருந்தும் வெளிவர முடியாது. தினமும் அவர்கள் முகத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இப்படி அண்டை வீட்டுக்காரர்கள் தரும் பிரச்சனையை எளிதாக சமாளிக்க, நம் வீட்டிலேயே பரிகாரம் செய்து கொள்ளலாம். அதைப் பற்றிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

enemy

அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் என்றாலே நமக்கு உதவியும் செய்வார்கள். ஒருசிலர் உபத்திரவம் கூட செய்வார்கள். இப்படி நமக்கு உபத்திரவம் கொடுக்கும் சில பேருடைய முகத்தில் விழித்தாலும், அவர்கள் எந்த தொல்லையும் கொடுக்காமல் இருக்க, நம்முடைய வீட்டில் இதனை செய்யலாம். இப்படி செய்யும் பொழுது நம்மைப் பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள். அல்லது அவர்களாகவே மனம் மாறி நம்மிடம் இணக்கமாக சென்று விடுவார்கள். இரண்டில் ஏதாவது ஒன்று நிச்சயமாக நடக்கும்.

நீங்கள் அந்த வீட்டில் வந்த புதிதில், அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கும். காலப்போக்கில் சிறு சண்டை கூட பெரியதாகி இரண்டு வீடுகளுக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டு விடும். அவர்கள் முகத்தில் விழிக்கவே நமக்கு சங்கடம் ஆகிவிடும். ஒன்று அவர்கள் இருக்க வேண்டும். இல்லையேல் நாம் இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு பகை வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த பகை நீங்க நம்முடைய வீட்டு வாசலில் அவர்கள் பார்க்கும் படியாக அதீத சக்தி கொண்டுள்ள கற்பக விநாயகர் படத்தை மாட்டலாம்.

karpaga-vinayagar

கற்பக விநாயகர் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றி நிம்மதியாக வாழ செய்யக் கூடியவர். இவருடைய படத்தை அவர்கள் பார்க்கும் பொழுது, அவர்களுடைய மனமும் இயல்பாகவே மாறிவிடும் அதிசயம் நடக்கும். அந்த அளவிற்கு கற்பக விநாயகர் படம் சக்திகளை பெற்றுள்ளது. வீட்டு வாசலில் மற்றவர்கள் பார்க்கும் படியாக விநாயகர் படத்தை தவிர, வேறு எதையும் வைக்க கூடாது என்பதையும் நினைவில். வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் இதையும் செய்து பார்க்கலாம். பெரும்பாலும் திருஷ்டிக்காக கட்டப்படும் காற்றாழை தோஷங்களை நீக்கக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. கற்றாழையை, வீட்டு வாசலில் மேல்நோக்கி மாட்டி விட்டால் போதும். பல காலம் வரை அழுகிப் போகாமல் காற்றை சுவாசித்து வாழ்ந்துவிடும். காற்றை சுவாசிக்கும் கற்றாழை, நம் வீட்டை நோக்கி வரும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்துக் கொள்ளும். இதனால் நமக்கு வரும் துன்பங்கள் நிச்சயமாக பாதி அளவிற்கு குறைந்துவிடும். அதனால் தான் அதனை எல்லோருடைய வீட்டு வாசலிலும் கட்டுகிறார்கள். ஆறு மாதம் ஒரு முறை இந்த காற்றாலையை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

velleruku

இவைகளை விட சக்தி வாய்ந்த ஒரு பொருள் இருக்கிறது. அதுதான் வெள்ளருக்கன் கட்டை. வெள்ளருக்கன் செடியிலிருந்து எடுக்கப்படும் இந்த கட்டை, வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால் போதும். எந்த விதமான தீய சக்திகளும் நம்மை நெருங்க கூட செய்யாது. உங்கள் மீது பொறாமை படுபவர்களுடைய கண் பார்வை தோஷங்களை, திருஷ்டிகளை அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடும் ஆற்றல் படைத்தது. கெட்ட எண்ணங்களுடன் உங்களை பார்ப்பவர்களுக்கு தான், அந்த பலனும் போய் சேரும். அந்த அளவுக்கு அதிக சக்திகள் கொண்டுள்ள வெள்ளருக்கன் கட்டை கட்டாயம் வீட்டு வாசலில் கட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
நிலை வாசலில் தீபம் ஏற்றுபவர்கள் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக்கூடாது. வீட்டின் ஐஸ்வரியம் குறைய இதுவும் ஒரு காரணம் தான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.