நிலை வாசலில் தீபம் ஏற்றுபவர்கள் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக்கூடாது. வீட்டின் ஐஸ்வரியம் குறைய இதுவும் ஒரு காரணம் தான்.

deepam1
- Advertisement -

தினம்தோறும் நம் வீட்டில் செய்யக்கூடிய இறைவழிபாட்டில் அறியாமல் ஏதேனும் சில தவறுகளை செய்வதன் மூலம், அந்த இறைவன் நம்மை உடனேயே தண்டித்து விட மாட்டார். அறியாமல் செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு. இருப்பினும் அந்த தவறுகளை விரைவில் நாம் சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நமக்கு பெரிய பெரிய பாதிப்புகளை தரவில்லை என்றாலும், நேரம் சரியில்லாத சமயத்தில் கஷ்டகாலம் வரும் சமயத்தில், சில கெட்ட அறிகுறிகளை நமக்கு உணர்த்திவிட்டு செல்லும் என்று சொன்னால் அது மிகையாகாது.

deepam

அந்த வரிசையில் நம்முடைய வீட்டில் நில வாசப்படியில் தீபம் ஏற்றும் போது நம்மில் சில பேர் செய்யும் தவறுகள் என்னென்ன, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். தெரிந்துகொண்டு அதை தெரிந்த மார்க்கத்திலேயே திருத்திக் கொண்டால் நல்லது என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாமா?

- Advertisement -

நில வாசப்படியில் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பவர்கள் காலை நேரமாக இருந்தாலும் சரி, மாலை நேரமாக இருந்தாலும் சரி, நில வாசப்படியில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்புதான் வீட்டிற்கு உள்ளே பூஜை அறையில் இருக்கும் தீபத்தை ஏற்ற வேண்டும். அதேபோல் வீட்டிற்குள் தீபத்தை ஏற்றி அதை வெளியே கொண்டுவந்து நில வாசப்படியில் வைக்கக்கூடாது.

Amman-deepam

நில வாசப்படியில் ஏற்படக்கூடிய தீபத்தில், இரண்டு டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றுவது நம் வீட்டில் ஐஸ்வர்யத்தை நிலைத்து நிற்கச் செய்யும். நில வாசப்படியில் தீபத்தை ஏற்றி வைத்து விட்டீர்கள். அரைமணிநேரம் தீபம் எறிந்த பின்பு, ஒரு சிறிய தாம்புல தட்டில் இரண்டு டைமண்ட் கற்கண்டு, ஒரு பூ வைத்து, நில வாசப்படியில் இருக்கும் இரண்டு தீபங்களையும் எடுத்து அந்த தாம்புல தட்டில் மேல் வைத்து, ‘எங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி தேவி வருகை தர வேண்டும்’ என்ற வேண்டுதலை, இந்த வார்த்தையை, நில வாசப்படியில் மனதார சொல்லி அந்த இரண்டு தீபங்களையும் கொண்டு போய் உங்கள் வீட்டிற்குள் பூஜை அறையில் தாம்பூலத் தட்டோடு வைத்து விட, வேண்டும்.

- Advertisement -

வீட்டு வாசலில் எறிந்த தீபம் கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு பூஜை அறையில் எரியும் பட்சத்தில், அந்த மகாலட்சுமி தேவியே, உங்கள் பூஜை அறையில் வந்து குடி கொள்வாள் என்பது ஐதீகம். அதாவது மகாலட்சுமி தேவியை உங்களுடைய வீட்டு தீபச் சுடரின் மூலம் நில வாசலிலிருந்து அழைத்து, உங்கள் பூஜை அறையில் ஆவாகனம் செய்கிறீர்கள் அவ்வளவுதான்.

dymond-karkandu

பின் நில வாசப்படியில் ஏற்றிய தீபத்தை கவனிக்காமல் அப்படியே சில பேர் விட்டு விடுவார்கள். அந்த தீபம் தானாக எறிந்து எண்ணெய் தீர்ந்து போய், திரி முழுவதும் எரிந்து போய், கருப்பு நிறத்தில் கருக தொடங்கிவிடும். எக்காரணத்தைக் கொண்டும் நில வாசப்படியில் ஏற்றப்படும் தீபம், பூஜை அறையில் ஏற்படக்கூடிய தீபம் கருகவேக்கூடாது. கருகிய வாடை வீசும் இடத்தில் நல்ல தேவதைகள் வாசம் செய்ய மாட்டார்கள் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும்.

- Advertisement -

poojai arai

நில வாசலில் இருக்கும் தீபத்தை, அழைத்து பூஜை அறைக்குக் கொண்டு போய் வைத்தாலும் சரி, பூஜை அறையில் 10 நிமிடங்கள் அந்த தீபம் எறிந்து முடிந்த பின்பு, புஷ்பத்தால் அல்லது அந்த டைமண்ட் கற்கண்டு கொண்டு அந்த தீபத்தை குளிர வைத்து விடவேண்டும். பூஜை அறையில் ஏற்றும் தீபத்தையும் சரி, நில வாசப்படியில் ஏற்றும் தீபம் ஆக இருந்தாலும் சரி, கருகும் வரை விட்டுவிடாதீர்கள் அது குடும்பத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெருமாள் அருள் பெற்ற இந்த 3 பொருட்களை வீட்டு வாசலில் கட்டுவதால் செல்வ வளம் பெருகுமாம்! நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -