இன்றைய காலக்கட்டத்தில் அழகு தொடர்பான பிரச்சனைகளுக்கு என்னென்ன தீர்வுகள் உண்டௌ அத்தனையும் நாம் தேடித் தேடி கண்டுபிடித்து பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கெல்லாம் ஒரு எளிய தீர்வை நம் முன்னோர்கள் காலத்திலே கண்டுபிடித்து பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் பழக்கத்திலிருந்த இந்த பொருளை நாம் சரியாக பயன்படுத்துவது கிடையாது. இப்போது அதைப் பற்றிய ஒரு தகவலை தான் இந்த அழகு குறிப்பு பதிவு நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
உச்சி முதல் பாதம் வரை அழகாக மாற
உங்கள் முழு உடலையும் மிருதுவாகவும் அதே நேரத்தில் நல்ல நிறத்துடனும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி அந்த பொருள் நல்லெண்ணெய் தான். முன்பெல்லாம் பெரும்பாலும் சமையலையே நல்லெண்ணெயில் தான் செய்தார்கள். இப்போதும் அழகு தொடர்பான பல வகை க்ரீம்களை தயாரிப்பதில் நல்லெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நல்லெண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தலையில் தேய்த்து குளிக்கும் போது நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. முடி உதிர்வு நின்று விடும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த நல்லெண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் உடலையும் குளுமைப்படுத்தும்.
அதுமட்டுமின்றி வாரம் ஒரு முறை இந்த நல்லெண்ணையை தேய்த்து குளிக்கும் போது உடல் சூடு தணிந்து கண்களும் பிரகாசமாக மாறும். அது மட்டும் இன்றி கண்கள் நல்ல அழகுடன் மிளிர இந்த நல்லெண்ணெய் குளியல் பெரிதும் உதவி செய்யும். அத்துடன் தலையில் இருக்கும் பொடுகு, பூச்சி வெட்டு போன்றவை எல்லாம் கூட இந்த நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும் போது சரியா ஆகும்.
அதே போல் நல்லெண்ணெயை தினமும் உங்கள் உதடுகளில் தடவி வரும் போது உதடு நல்ல நிறத்துடன் மாறுவதுடன், மிருதுவகவும், மென்மையாகவும் மாறும். இதை ஆண் பெண் இருவருமே தொடர்ந்து செய்யலாம். இந்த நல்லெண்ணையை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்தில் தோன்றும் முகப்பரு முகப்பருவினால் ஏற்படும் தழும்புகள் போன்றவை கூட நீங்கி விடும்.
அதுமட்டுமின்றி நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சரும பிரச்சனைகள் எதுவும் வராது. தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரியாக்குவதில் நல்லெண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளும் போது இது ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்தி கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: அடர்த்தியான ஆரோக்கியமான முடியை பெற உதவும் ஹேர் கிரீம்
காலம் காலமாக பயன்படுத்தி வந்த ஒரு பொருளை கால மாற்றத்தினால் நாம் மறப்பதால் இன்று பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும் வாரம் ஒரு முறையாவது இப்படி நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உடல் அதிக குழுமையாக உள்ளது என நினைப்பவர்கள் லேசாக சூடு படுத்திய பிறகு தேய்க்கலாம். ஆனால் தேய்த்து குளிப்பது மிகவும் அவசியமாக ஒன்று தான். இந்த பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.