வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை திரும்ப, லட்சுமி கடாட்சம் பெருக இந்த 1 கனியை தானம் செய்தால் போதுமே!

nellikai

பூஜை, புனஸ்காரங்கள், ஆன்மீக விஷயங்களை பொறுத்தவரை எலுமிச்சை கனி என்பது மிகவும் முக்கியமான ஒரு கனியாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு ஈடு இணையாக பார்க்கப்படும் ஒரு கனி வகை தான் ‘நெல்லிக்கனி’ என்பதாகும். எலுமிச்சை கனிகளுக்கு தோஷங்கள் உண்டு. ஆனால் இந்த நெல்லிக்கனிக்கு எந்த விதமான தோஷமும் கிடையாது. எலுமிச்சை கனியை நல்லது செய்யவும், கெட்டது செய்யவும் பயன்படுத்துவார்கள்.

lemon

பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்களில் எலுமிச்சையை பயன்படுத்துவது உண்டு. ஆகவே தேவ கனியாக இருக்கும் எலுமிச்சை கனியை விட நெல்லிக்கனி மிகவும் விசேஷமானது. அவ்வகையில் இந்த நெல்லிக்கனியானது குடும்பத்தில், சுபிட்சம் நிலைக்கவும், கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும் எப்படி செய்யும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நெல்லி மரத்தில் சாட்சாத் மகாலட்சுமி ஸ்வரூபம் உள்ளதாக புராண கூற்றுகள் உள்ளன. மகாலட்சுமி தேவியின் மறு உருவம் தான் இந்த நெல்லி மரம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். நெல்லிக்கனியை தினம் ஒன்று சாப்பிட்டு வர வாழ் நாளின் ஆயுள் நீடிக்கும் என்கிறது அறிவியல். மனிதனை இளமையுடன் வாழ வைக்கும் சஞ்சீவினி மூலிகையாக இருக்கும் நெல்லிக்கனியை தானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. நெல்லிக்கனியை முறையாக எப்படி தானம் செய்வது? என்பதை பார்ப்போம்.

nelli-maram

உங்களுடைய வீட்டில் எப்பொழுதும் நெல்லிக்கனி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் வீட்டிலும் நெல்லி மரம் இருப்பது தன, தானியத்தை பெருக்கும் என்கிறது ஆன்மீகம். நாடு, நகரங்களை இழந்த செல்வாதிபதி குபேரன், மீண்டும் தன் நிலைக்கு திரும்ப ஸ்ரீமன் நாராயணன் அருளிய மிகப்பெரிய பரிகாரம் இது தான். நெல்லி மரத்தை பேணி காத்து வளர்த்து வருவது என்பது மகாலட்சுமியை நம்முடன் வைத்துக் கொள்வதற்கு சமமாகும்.

- Advertisement -

வீட்டில் நெல்லி மரம் வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமம் கொடுத்து, தாம்பூலத்துடன், நெல்லிக்காயையும் சேர்த்துக் கொடுத்து அனுப்ப வேண்டும். குறிப்பாக இதனை வெள்ளிக் கிழமைகளில் செய்வது அபரிமிதமான பலன்களை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமையில், கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு நெல்லிக்கனியை தானம் கொடுக்கலாம்.

nelli-maram1

நெல்லி மரக்கன்றை உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து அனுப்பினால் அதை விட ஒரு சிறந்த பேறு உங்களுக்கு இல்லை. பல்வேறு நோய்களை குணமாக்கும் நெல்லிக்கனி அறிவியலிலும் உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல ஆன்மீக ரீதியாகவும் நெல்லிக்கனி என்பது அதிர்ஷ்ட கனியாக பார்க்கப்படுகிறது.

Nellikai benefits in tamil

இக்கனியை நம் வீட்டில் நடக்கும் விரதம், பூஜை, நோன்பு போன்றவற்றில் வைத்து பக்தர்களுக்கு நிவேதனமாகப் படைப்பது என்பது அதிர்ஷ்டமான யோகத்தை கொடுக்கும். உங்களால் முடிந்த பொழுது நெல்லிக்கனியின் விதைகளை குழந்தைகளுக்கு கொடுத்து வளர்க்க கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது. நெல்லிக்கனியின் அருமை, பெருமையை தெரிந்து கொள்ளாதவர்கள் ஜென்ம கர்மாக்களை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படியிருக்க நெல்லிக்கனி தானம் என்பது எவ்வளவு பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும்? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெல்லிக்கனி கொண்டு செய்யப்பட்ட நைவேத்தியங்களை தானம் செய்வது என்பதும் மிகவும் நல்ல விஷயம். நெல்லிக்கனியை கொண்டு செய்யப்படும் நிவேதனப் பொருட்கள் இறைவனும், அவருடைய அடியார்களுக்கும் கொண்டு போய்சேர நம்முடைய வீட்டில் நடக்கும் பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை.