இந்த பொருளை வாயில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது அப்படியே பலிக்கும். எதிராளியால் உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசவே முடியாது.

enemy
- Advertisement -

வாய்ஜால வித்தையில் ஜெகஜாலக்கில்லாடி ஆக இருப்பவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக்கு திறமை என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பேசிப்பேசியே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். சிலபேர் பேசும் போது, அவர்களை எதிர்த்துப் பேசி நம்மால் ஜெயிக்கவே முடியாது. வாய் சாதுரியத்தால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் நிறைய பேர். இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில பேர் கொடுத்த வாக்கை மீறவே மாட்டார்கள். சொன்னால் சொன்ன வாக்கை, சொன்ன நேரத்தில் காப்பாற்றுவதில் உறுதியாக நிற்பார்கள். இப்படியாக நம்மேல் நல்ல அபிப்ராயம் வர சொல்வாக்கு மிக மிக அவசியம் தேவையான ஒன்று.

ஆனால், நிறைய பேருக்கு உள்ளுக்குள்ளே நிறைய திறமை இருக்கும். இருப்பினும் அந்தத் திறமையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. சாதுரியமாக பேசத் தெரியாது. சிலபேர் அடுத்தவர்களுக்கு ‘நான் இதை செய்கின்றேன்! அதை செய்கின்றேன்!’ என்று வாக்கு கொடுத்து விடுவார்கள். ஆனால் சொன்ன நேரத்தில் சொன்ன விஷயத்தை அவர்களால் செய்து தர முடியாமல் கெட்ட பெயர் எடுத்துக் கொள்வார்கள். ‘ஆமா நீ பேச தான் செய்வாய். உனக்கு வாய் மட்டும் தான். ஆனால் எதையுமே செயல்படுத்திக் காட்ட மாட்டாய்’ என நிறைய பேரை நாமே திட்டி இருப்போம். யோசிச்சு பாருங்க.

- Advertisement -

இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கும் இருந்தால், உங்களுடைய வாக்கு வன்மையை, உங்களுடைய பேச்சுத் திறமையை, உங்களுடைய சொல்வாக்கை செல்வாக்காக மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அதி அற்புதமான கனி என்று சொல்லப்படுவது நெல்லிக்காய். நீங்கள் ஏதாவது ஒரு முக்கியமான காரியத்திற்காக வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதாக இருந்தால், காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, இறைவனை வணங்கிவிட்டு அதன்பின்பு ஒரு துண்டு நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளை தொடங்க வேண்டும்.

நெல்லிக்காயை சாப்பிட்டு விட்டு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உதாரணத்திற்கு ஒரு இன்டர்வியூவிற்க்காக வெளியே போறீங்க. நீங்கள் எதிர்பார்த்த அந்த நல்ல வேலை கிடைக்க வேண்டும். உங்களுடைய பர்பாமன்ஸ் பெஸ்ட் ஆக இருக்க வேண்டும். உங்களுக்கு வேலையே கொடுக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் கூட, வேலை கொடுக்க வேண்டும். உங்களுடைய பேச்சாற்றலை பார்த்து! என்றால் இந்த நெல்லிகாய் பரிகாரம் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். இது ஒரு வழி.

- Advertisement -

அடுத்தபடியாக, நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளை எடுத்து வெயிலில் உலர வைத்து காயவைத்து பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கொட்டையை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் இதை கையில் எடுத்து செல்லலாம்.

முக்கியமான வேலைகளை நீங்கள் பேசி சாதிக்க வேண்டும். நீங்கள் சொல்வதை எதிராளி கேட்டே ஆக வேண்டும் என்றால், இப்படிப்பட்ட விஷயங்களுக்கு செல்லும்போது அந்த நெல்லிக்காய் கொட்டையை சிறிது நேரம் உங்கள் வாயில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு இருபது நிமிடங்கள் அந்த நெல்லிக்காய் கொட்டை வாயில் இருந்தால் கூட போதும். அதன் பின்பு அந்த கொட்டையை வாயில் இருந்து எடுத்து விடுங்கள். நிச்சயம் நீங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அதை சாதித்துக் காட்டுவீர்கள். (அவ்வளவுதான் அந்த கோட்டையை மீண்டும் பயன்படுத்த முடியாது தூக்கிப் போட்டு விட வேண்டும்).

இந்த நெல்லிகாய் கொட்டையின் வைப்ரேஷன் உங்களுடைய சொல்வாக்கை அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்கள் அடுத்தவர்களுக்கு அப்படியே பலிக்கும். இவன் வாயால் ஏதாவது ஒன்றை சொன்னால் அது அப்படியே நடந்து விடுகின்றது என்று ஊரே பேசும் அளவிற்கு உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். எதிராளியின் வாயை அடைக்கும் அளவிற்கு உங்களுடைய வாய் ஜாலத்தில் சாதுரியம் அதிகரிக்கும்.

சொன்னால், சொன்ன வாக்கை நிறைவேற்றும் திறன் உங்களுக்குள் வந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் எல்லா விஷயங்களையும் அடுத்தவர்களுக்கு நல்லது நடக்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு கெட்ட காரியத்திற்கும் இதை பயன்படுத்தினால் அது நமக்கு எதிராக மாறிவிடும் என்ற ஒரு கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -