கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக குறிப்புகள் உங்களுக்காக இதோ!

vilakku-coconut
- Advertisement -

நாம் வழக்கமாக பூஜை செய்யும் பொழுது அல்லது ஆன்மீக ரீதியான விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? அல்லது எப்படி செய்ய வேண்டும்? என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

pooja-room

இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாம் விசேஷ அல்லது அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது கூட நிவேதனமாக தேங்காயை வைப்பது வழக்கம். அப்படி வைக்கும் தேங்காயை தாராளமாக நாம் சமையலுக்கு உபயோகிக்கலாம். அதில் எந்த சந்தேகமும் நீங்கள் கொள்ள தேவை இல்லை. ஆனால் அந்த தேங்காயில் சமைத்த உணவு பொருட்களை நிவேதனமாக மறுபடியும் தெய்வங்களுக்கு படைக்கக் கூடாது என்பது நியதி. இந்த தவறை இனி ஒருபோதும் செய்து விடாதீர்கள்.

- Advertisement -

அது போல் நைவேத்யங்களை படைக்கும் பொழுது நேரடியாக உலோகப் பாத்திரங்களில் படைக்கப்படாமல் இயற்கையாக கிடைக்கும் வாழை இலை அல்லது தெய்வீக இலைகளை வைத்து அதன் மேல் நைவேத்யம் படைப்பது சிறந்த முறையாகும். நீங்கள் கோவிலுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் வீட்டில் கோலம் போட்டு விட்டு தான் செல்ல வேண்டும். அது போல் வீட்டில் விளக்கேற்றி விட்டு பின்னர் கோவிலுக்கு செல்வது தான் நல்லது.

prasatham1

வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை வெறும் கைகளால் தொடக் கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணையை எந்த காரணம் கொண்டும் நம்முடைய தலையில் தடவிக் கொள்ள கூடாது. இது மிகப்பெரிய தெய்வ குத்தம் ஆகிவிடும்.

- Advertisement -

பொதுவாக கோவில்களில் தெய்வ தரிசனத்தை முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவது வழக்கம். ஆனால் மகாலட்சுமி வீற்றிருக்கும் விஷ்ணு கோவில்களில் இவ்வாறு அமரக்கூடாது. இந்தக் கோவிலில் இருந்து நாம் வீட்டிற்கு செல்லும் பொழுது மகாலட்சுமி ஆனவள் நம்முடன் வருவதாக ஐதீகம் உள்ளது. எனவே எங்கும் அமராமல் நேராக வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

temple

வீட்டில் குபேரர் சிலையை அனைவரும் பார்க்கும் வண்ணம் வாசலுக்கு நேரெதிராக அமைத்து வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும். நீங்கள் பணம் சேமிக்கும் உண்டியல் குபேரன் பொம்மை போன்று இருப்பது மிகவும் நல்லது. அத்தகைய உண்டியல்கள் விற்பனைக்கு உள்ளன.

- Advertisement -

kubera-hundi

தலைவாசலில் கதவிற்கு உட்பக்கமாக ஸ்ரீ சக்கரம், சுவஸ்திக் அல்லது ஓம், திரிசூலம் போன்ற சின்னங்களை வரைந்து வைப்பது அல்லது ஸ்டிக்கர் வாங்கி ஓட்டி வைப்பதும் வீட்டின் பாதுகாப்பு அரணாகவும், அதிர்ஷ்டம் பெருகவும் துணையாக இருக்கும். இந்தச் சின்னங்களை நீங்கள் நல்ல காரியத்திற்கு வெளியே செல்லும் பொழுது உங்களுடைய பர்ஸ் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதால் காரிய வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

Swastik

பூஜை அறையில் பூஜை செய்வதற்கு பக்தி என்கிற பெயரில் எப்பொழுதும் நிறைய சாமி படங்களை வாங்கி அடுக்கி வைக்க கூடாது. இருக்கும் படங்களையும் நெருக்கமாக கட்டாயம் வைக்க கூடாது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் நிச்சயம் இடைவெளி இருக்க வேண்டும். தெய்வப் படங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை அருகில் இருக்கும் கோவில்களில் கொண்டு போய் வைத்து விடுவது நல்லது. வீட்டில் வைத்திருக்காதீர்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த நாளில் பெண்கள் வீட்டில் ஒட்டடை அடித்தால்! ஆண்களுக்கு கடன் அதிகமாகுமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -