இந்த இரண்டு பொருட்கள் உங்கள் கையில் இருந்தால் போதும். வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கும் ஹேர் பேக்கை சட்டென செய்திடலாம்

hair
- Advertisement -

வயதாகி விட்டாலும் இளமையாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் அழகைப் பராமரித்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக தான் இருப்பார்கள். எப்பொழுதும் தங்கள் வயதை அதிகப்படுத்திக் காட்டும் உருவத் தோற்றத்தை எவரும் விரும்புவதில்லை. எனவே சிறு வயதிலேயே முடி கொட்டும் பிரச்சினை வந்து விட்டால் விரைவிலேயே வயதான தோற்றம் தோன்ற ஆரம்பிக்கிறது. இவ்வாறான முடி கொட்டும் பிரச்சனை காரணமாக பல இளைஞர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இப்பொழுது இருக்கும் வேலை சுமை காரணமாகவும், சுற்றுச் சூழல் காரணமாகவும் இயல்பாகவே அனைவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை உண்டாகிறது. இதனை சரி செய்ய நமது ஆரோக்கியத்தையும், அழகையும் முறையாக பராமரித்து தான் ஆக வேண்டும். அவ்வாறு நேரம் கிடைக்கின்ற நேரத்தில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஹேர் பேக்கை பயன்படுத்தினால் குறைந்த நாட்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. வாருங்கள் இந்த ஹேர் பேக்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே மூடி கொஞ்சமாக உதிரும் நேரத்திலேயே நாம் கவனமாக இருக்க வேண்டும். முடிக்கு தேவையான ஆயில் மசாஜ், கரோட்டின் போன்றவற்றை சரியாக கொடுத்தால் மட்டுமே முடி ஆரோக்கியமாக இருக்கும். உடல் உஷ்ணத்தின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உண்டாகும் தலைமுடி பிரச்சனைகளை சரி செய்ய இயற்கையான முறையிலேயே பல வழிமுறைகள் இருக்கின்றன.

- Advertisement -

இவ்வாறு இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் முடி உதிர்ந்த இடத்தில் இருக்கும் துவாரத்தின் வழியாக தூசிகள் உள் சென்று விரைவாக உங்கள் முடியின் வேர்க்கால்களை சேதப்படுத்த ஆரம்பிக்கிறது. இதன் காரணமாகத்தான் அந்த இடத்தில் புதிய முடி வளராமல் வழுக்கைத்தலை உண்டாகிறது.

இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட வழுக்கை தலையிலும் முடி வளர்வதற்கும், இருக்கின்ற முடி வலுவாக இருப்பதற்கும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும். அதற்காக முதலில் அனைவரது வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையும் சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்கவேண்டும். பின்னர் இந்த ஹேர்பேக் தயார் செய்வதற்கு முதல் நாள் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை 4 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இவர் ஊற வைத்த வெந்தய நீரையும் வெங்காயம் மற்றும் நெல்லிகாயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு வடிகட்டி பயன்படுத்தி நன்றாக வடித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு மூடி போட்ட பாட்டிலில் ஊற்றி அதனுடன் 2 ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குளிக்க வேண்டும். அப்பொழுதுதான் விளக்கெண்ணெய் இந்த கலவையுடன் நன்றாக கலந்து வரும். பிறகு இந்த கலவையை தலை முழுவதும் முடியின் வேர்க்கால்களில் நன்றாக படுமாறு தடவி விட்டு, 20 நிமிடத்திற்கு ஊறவைத்து, அதன் பிறகு தலை முடியை தண்ணீரில் அலச வேண்டும்.

- Advertisement -