உங்கள் வீட்டில் இந்த மரம் இருந்தால் கார்த்திகை மாதத்தில் வீட்டிற்கு வருபவர்களுக்கு இதை தானமாக கொடுத்து அனுப்புங்கள் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.

murugan-nellikani

பொதுவாகவே தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை சேர்க்கும் என்பார்கள். எந்த அளவிற்கு நம்மால் முடிந்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறோமோ! அந்த அளவிற்கு நமக்கு செல்வமும், வருமானமும் பெருகும். நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் நாமே வைத்துக் கொண்டிருந்தால் நம்மிடம் இருக்கும் பொருட்களும் நம்மை விட்டு விலகிவிடும். போகும் போது நீங்கள் எதையும் கையில் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. உங்களிடம் அதிகமாக இருக்கும் அத்தனை பொருட்களையும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவது மேலும் மேலும் பொருள் சேர்க்கையை உண்டாக்கும்.

thanam

அவ்வகையில் உங்கள் வீட்டில் இந்த மரம் இருந்தால் அதனை கார்த்திகை மாதத்தில் இந்த வகையில் தானம் கொடுப்பதன் மூலம் கோடான கோடி பலன்கள் கிடைப்பதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. அப்படியான தானம் என்ன? என்பதைத் தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். மாதங்களில் கார்த்திகை மாதம் தனி சிறப்பினை உடையது. பூமி குளிர்ந்து மரம், செடி, கொடிகள் அனைத்தும் செழித்து வளரும் மாதமாக இருப்பதால் இம்மாதத்தில் செய்யும் தானம் ஆனது கோடி பலன்களை தரும் என்பார்கள்.

கார்த்திகை மாதத்தில் வீட்டிற்கு வருபவர்களுக்கு இந்த மரத்தில் இருக்கும் கனிகளை பவ்யமாக பறித்து, வெற்றிலை, பாக்குடன் மலர்களை வைத்து முருகப் பெருமானின் பக்தி சாராம்சம் நிரம்பிய கந்த சஷ்டிக் கவசத்தையும் சேர்த்து தானம் கொடுப்பதால் நல்ல பலன்கள் வீட்டில் உண்டாகும். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி வாழ்வும் செழிக்கும் ஐதீகம்.

nelli-maram

சரி இனி அது என்ன மரம்? என்பதை பார்ப்போம். அதியமான் அவ்வையாருக்கு கொடுத்த நெல்லிக்கனி தான் அது. ஆம் உங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்தால் அதை விட சிறந்த செல்வம் எதுவும் இல்லை என்று நினைக்கலாம். அந்த அளவிற்கு நெல்லி மரத்தின் பெருமைகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகவும் புராணங்கள் கூறுகிறது. இத்தகைய நெல்லி மரத்தில் இருக்கும் நெல்லிக்கனிகளை கார்த்திகை மாதத்தில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் கோடானகோடி பலன்களை பெறுவீர்கள்.

- Advertisement -

அதே போல் கார்த்திகை மாதத்தில் மற்றொரு தானமும் இருக்கிறது. இயலாதவர்களுக்கு இந்த தானம் செய்வதால் நீங்கள் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருந்தாலும், வேலை இல்லாமல் வருமானத்திற்கு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும் உங்கள் பிரச்சனைகள் முற்றிலுமாக தீர்ந்துவிடும். கார்த்திகை மாதத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு படுக்க பாயும், போர்த்திக் கொள்ள கம்பளியும் தானமாக கொடுப்பது மிகப்பெரிய பலன்களை உண்டாக்கும்.

paai2

எப்பொழுதும் ஆசன தானத்தை வழங்கும் பொழுது அதாவது பாயை தானமாக ஒற்றையாக வழங்கக்கூடாது. இரண்டு பாய்களை ஜோடியாக சேர்த்து தான் வழங்க வேண்டும். உங்களால் முடிந்த ஒருவருக்கேனும் இரண்டு பாய்களையும், இரண்டு கம்பளிப் போர்வைகளையும் கொடுத்து விட்டு வருவதால் அடுத்த கார்த்திகை மாதத்திற்குள் எவ்வளவு கஷ்டங்கள் உங்களுக்கு இருந்தாலும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். தானம் செய்வதற்கு பல மாதங்கள் பல விஷயங்களை கொண்டுள்ளது. அவ்வகையில் கார்த்திகை மாதத்தில் இந்த இரண்டு தானங்களை செய்வதன் மூலம் கோடான கோடி பலன்கள் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க இதைப் பயன்படுத்தினால் மிகவும் நல்லதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.