எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க இதைப் பயன்படுத்தினால் மிகவும் நல்லதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

vilakku
- Advertisement -

பொதுவாகவே எரிந்து கொண்டிருக்கும் விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது என்பது நியதி. தீபத்தை அணைத்தல் என்ற வார்த்தையை அமங்கல சொல்லாக சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. விளக்கை அணைக்கிறேன், விளக்கை அணைக்க போகிறேன் என்கிற வார்த்தையை வீட்டில் உபயோகிப்பது கூட அமங்கலம் உண்டாக்கும் சொல்லாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியிருக்க தீபத்தை அணைப்பது பற்றி எப்படி கூற வேண்டும்? அதேபோல் எதைக் கொண்டு அணைக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு தேவைப்படுகிறது. அதைப் பற்றிய அலசல்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

ainthu-muga-vilakku

விளக்கை அணைப்பது என்கிற சொல்லை வீட்டில் உபயோகிக்காமல் விளக்கை அமர்த்துதல், அமர்த்துகிறேன், அமர்த்த போகிறேன் என்று சொல்லலாம். இல்லையென்றால் இப்படியும் சொல்லலாம் மலை ஏற்றுகிறேன், மலையேற்ற போகிறேன், மலை ஏற்ற வேண்டும், மலையேற்று என்று சொல்லலாம். விளக்கை அமர்த்துகிறேன் அல்லது விளக்கை மலையேற்றுகிறேன் இந்த இரு வார்த்தைகளை வீட்டில் உபயோகிப்பதால் மங்கலப் சொல்லாக கருதப்படுகிறது.

- Advertisement -

எப்போதும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். எனவே சிரமம் பார்க்காமல் இந்த இரு கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

vilakku

விளக்கு ஏற்றிய பின் யாருக்கும் எதையும் கொடுக்கக்கூடாது என்று சொல்லி வைத்தார்களே தவிர, எதையும் தர்மம் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. எனவே வீட்டில் விளக்கு வைத்த பின்னர் ஊனமுற்றவர்களுக்கு அல்லது ஏழை குழந்தைகளுக்கு நீங்கள் உங்களால் முடிந்த பொருட்களை தர்மம் செய்தால் உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கும். செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். அதை ஏன் விளக்கு வைத்த பின்னர் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி எழும். விளக்கு வைத்தபின் வீட்டில் தெய்வ கடாட்சம் இருப்பதால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் நிறைய பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

பூஜை பொருட்கள் ஏதாவது குறைந்து விட்டால் அல்லது காலியாகி விட்டால் அதை இல்லை என்று சொல்லக்கூடாது. பூஜை பொருட்கள் என்று இல்லை. எல்லா விஷயத்திலும் இல்லை என்கிற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்பது ஆன்மீக விதி. அதற்கு பதிலாக ஊதுபத்தி வாங்க வேண்டும், கற்பூரம் வாங்க வேண்டும், இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்பது போன்ற வார்த்தைகளை உபயோகிக்கலாம்.

vilakku2

ஏற்றிய விளக்கை மலையேற்றும் பொழுது கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளை கொண்டு அமர்த்தி விடக்கூடாது. ஒன்று அருகில் இருக்கும் புஷ்பங்களைக் கொண்டு அமர்த்தி விட வேண்டும். மற்றொன்று மிகவும் தெய்வீக அம்சமான இனிப்பான கல்கண்டு கொண்டு அணைப்பது நிறைய பலன்களைத் தரும். வீட்டில் எப்போதும் கல்கண்டு வைத்திருப்பது மிக மிக நல்லது.

- Advertisement -

kalkandu

குபேர சம்பத்து பெற வீட்டில் எப்போதும் ஊறுகாய் இருக்க வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது. அதே போல் தான் பச்சை கற்பூரமும், கல்கண்டும் எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும் அதுவும் பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டும். நைவேத்தியத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் சிறிது கல்கண்டை நைவேத்தியமாக படைக்கலாம். அது போல் நினைத்தது நடக்க சிறிது கற்கண்டை விபத்தில் இருக்கும் எண்ணெயில் போட்டு விளக்கு ஏற்றலாம். இதை கல்கண்டு தீபம் என்பார்கள். அது போல் கல்கண்டை கொண்டு விளக்கை அணைப்பது தெய்வங்கள் குளிர்வதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே புஷ்பத்தை கொண்டு அமர்த்துவதை விட கல்கண்டு கொண்டு அமர்த்துவது சிறப்பான நல்ல பலன் தரும்.

இதையும் படிக்கலாமே
பணத்தை செலவு செய்யும் போதும், அடுத்தவர்களுக்கு கொடுக்கும் போதும், இப்படி கொடுக்கவே கூடாது! உங்கள் ஆயுசுக்கும் பணக்கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -