நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

Sivan Temple
- Advertisement -

சித்தர்கள் அனைவருமே வழிபடக்கூடிய இறைவனாக சிவ பெருமான் இருக்கிறார். அந்த சித்தர்களின் தலைமை சித்தரான அகத்திய பெருமான் தமிழ் மொழி மற்றும் தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளார். சிறந்த சிவ பக்தரான அகத்தியர் பல சிவலிங்கங்களை ஸ்தாபித்து நாடுமுழுவதும் பல சிவன் கோயில்களை உருவாக்கியுள்ளார். அப்படியான கோயில்களில் ஒன்றான “சென்னை நெமிலிச்சேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்” பற்றிய சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

agathiyar

நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயில் வரலாறு

மிகவும் பழமையான இக்கோயிலை தமிழகத்தின் பரவலான பகுதிகளை ஆண்ட குலோத்துங்க சோழ மன்னனால் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. பிற்காலங்களில் விஜயநகர பேரரசர்கள் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தற்போதுள்ள நிலையில் கட்டியமைத்தனர். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் அகத்தீஸ்வரர் என்றும் அம்பாள் ஆனந்தவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது.

- Advertisement -

“நெமிலி” என்றால் தெலுங்கு மொழியில் “மயில்” என்று பொருள். “செருவு” என்றால் “கூட்டம்” என்று பொருள் முற்காலங்களில் இப்பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்த போது இங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் “நெமிலி செருவு” என்று பெயர்கொண்ட இவ்வூர் காலப்போக்கில் “நெமிலிச்சேரி” என பெயர்பெற்றது. தமிழ் முனியான அகத்திய முனிவர் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட கோயில்களில் இருக்கும் இறைவன் அகத்தியர் பெயர் சேர்த்து அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மூலவரான லிங்கமும் அந்த அகத்திய முனிவர் ஸ்தாபித்தது என்பதால் இங்கிருக்கும் இறைவனும் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

இக்கோயிலின் இறைவியாகிய ஆனந்தவல்லி தாயார் தெற்கு திசை நோக்கி அபய முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஈசன் போகலிங்கமாக இருப்பதால் நமது வாழ்வில் போகங்கள் பெருகச்செய்கிறார். இக்கோயிலில் சூரியன் மற்றும் சந்திரனுடன் பைரவர் சேர்ந்து ஒரே சந்நிதியில் இருந்து அருள்பாலிப்பது அதிசயமான அம்சமாகும். நீண்ட நாட்களாக தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இங்கிருக்கும் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால் எப்பேர்ப்பட்ட நோய்களும் சீக்கிரத்தில் குணமாவதை அனுபவத்தில் கண்ட பல பக்தர்கள் கூறுகின்றனர். தங்களின் பிராத்தனை நிறைவேறியவர்கள் இறைவன் மற்றும் இறைவிக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

- Advertisement -

கோயில் அமைவிடம்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சென்னை மாநகருக்கு அருகே இருக்கும் நெமிலிச்சேரி என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல சென்னை மாநகரிலிருந்து ஏராளமான பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் வசதிகள் இருக்கின்றன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

- Advertisement -

கோயில் முகவரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நெமிலிச்சேரி
சென்னை – 600044

இதையும் படிக்கலாமே:
உறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nemilichery agastheeswarar temple history in Tamil. it is also called Agastheeswarar koil nemilichery in Tamil or Nemilichery agastheeswarar koil in Tamil or Nemilichery sivan koil in Tamil or Chennai nemilichery in Tamil.

- Advertisement -