மூச்சுக் குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் நெஞ்சு சளி, தும்மல், இருமல் போன்றவற்றை நீக்க பாட்டி சொன்ன கை வைத்தியம் ஒன்றே போதுமே!

sali-panam-karkandu
- Advertisement -

பல வேறுபட்ட வைரஸ் கிருமிகளால் உண்டாகக்கூடிய இந்த சளி தொந்தரவுகள் பெரும்பாலும் உஷ்ணத்தால் வரக்கூடியதாக இருக்கிறது. உடலின் வெப்பநிலை சமன் செய்ய முடியாத பொழுது சளி உருவாகிறது. உடம்பில் இருக்கும் திரவம் சளியாக மாறும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. தும்மல், இருமல், சுவாச பிரச்சனைகள் என்று தொடர்ந்து அதுவே காய்ச்சலாகவும் உருவெடுக்கிறது. உடலின் வெப்பநிலையை எப்போதும் சமமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் இது மிகப்பெரிய பிரச்சனையாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும். நெஞ்சு சளியையும், சளி சார்ந்த பிரச்சினைகளையும் ரொம்பவே சுலபமாக தீர்க்கக் கூடிய பாட்டி கை வைத்தியம் என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் ஆரோக்கிய தகவல்களாக அறிந்து கொள்ள இருக்கிறோம்.

எந்த வகையில் சளி நம் உடம்பில் தேங்கி இருந்தாலும் அதை ஒன்று கரைத்து வெளியேற்றி விட வேண்டும் அல்லது வாய் வழியாக உமிழ்ந்து உடலை விட்டு போகுமாறு செய்து விட வேண்டும். இல்லை என்றால் அது நாட்பட்டால் பெரிய தொந்தரவாக மாறிவிடும். குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நெஞ்சு சளியிலிருந்து விடுபடுவதற்கு நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த எளிய கை வைத்தியத்தை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

முதலில் ஒரு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் சளிக்கு பால் சேர்க்கக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. சளியின் பொழுது பாலை தண்ணீராக சேர்த்துக் கொள்ளலாம். அரைக்கப் அளவிற்கு பால் எடுத்துக் கொண்டால் முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது அரை கப் அளவிற்கு பாலுடன், அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

கொதிக்கும் இந்த பாலில் கால் ஸ்பூன் அளவுக்கு சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளாக இருக்கலாம். ஒரு கிளாஸ் பால் முக்கால் கிளாஸ் அளவிற்கு சுண்ட கொதிக்கும் அளவிற்கு காத்திருங்கள். அதன் பிறகு அதை அப்படியே வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த மஞ்சள் சேர்த்த பாலுடன், ஒரு ஸ்பூன் அளவிற்கு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பனங்கற்கண்டு சேர்த்த இந்த மஞ்சள் பால் நம் சுவாசக் குழாய்களை சுற்றிலும் இருக்கக்கூடிய நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றி விடும் அற்புதமான ஆற்றல் படைத்தது. இதை வெறும் வாயில் மென்று எச்சில் நீருடன் சேர்த்து சாப்பிட்டாலே நெஞ்சு சளி கரைய ஆரம்பித்து விடும். இது போல மூலிகை பாலாக குடிக்கும் பொழுது தும்மல், இருமல் போன்றவையும் ரொம்ப சுலபமாக நீங்கிவிடும்.

எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த இயற்கையான மூலிகை மஞ்சள் பாலை இந்த முறையில் பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியும் கரைய ஆரம்பித்து விடும். அதன் பிறகு சுவாசிப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்க, நல்ல சுவாசம் உண்டாகும். மேலும் தொடர்ந்து சுடு தண்ணீர் பருகி வர வேண்டும். அடிக்கடி பனங்கற்கண்டை எடுத்துக் கொண்டு வந்தாலே சளி தொந்தரவிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

- Advertisement -