- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநெருக்கடியான கடன் சுமையிலிருந்து நிரந்தரமாக வெளிவர தேங்காய் பரிகாரம்

நெருக்கடியான கடன் சுமையிலிருந்து நிரந்தரமாக வெளிவர தேங்காய் பரிகாரம்

- Advertisement -

மிகவும் நெருக்கடியான பணப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறீர்கள். இந்த கடனை திருப்பி கொடுத்தால் மட்டும்தான், உங்களால் நிம்மதியாக மூச்சு விட முடியும். பல பிரச்சினைகள், இந்த கடனால் உங்கள் வாழ்க்கை சீர் அழிந்து கொண்டிருக்கிறது. வேலை தொழில் குடும்பம் குழந்தை நிம்மதி என்று எதுவுமே உங்களிடம் இல்லை.

எல்லாவற்றையும் இழந்து வெறும் கடனை மட்டும் வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை தரக்கூடிய எளிமையான தேங்காய் பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கடனை அடைக்க தேங்காய் பரிகாரம்

தாந்திரீக ரீதியாக இந்த தேங்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்திற்கு பல மடங்கு சக்தி அதிகம். தேங்காயை தானமாக கொடுத்தால் ரொம்பவும் நல்லது என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் கஷ்டங்கள் விலக மட்டை தேங்காய் தானம் செய்வார்கள். தேங்காயை தானம் கொடுக்கும் போது தேங்காயின் கண் பகுதி வெளியில் தெரியக்கூடாது.

அப்போதுதான் பரிகாரத்திற்காக தேங்காய் தானம் கொடுக்கும் போது, அந்த பரிகாரத்திற்கு பலன் இருக்கும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இப்போது எல்லாம் யாரும் மட்டை தேங்காயை வாங்கி தானம் அளிப்பது கிடையாது. மட்டையை உரித்த தேங்காயை வாங்கி தான் தானம் கொடுக்கின்றோம்.

- Advertisement -

நீங்க என்ன பண்றிங்க, ஒரு மட்டை தேங்காய் அல்லது உரித்த தேங்காய் ஏதோ ஒரு தேங்காயை வாங்கி சிவப்பு நிற துணியில் வைத்து, அதை ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய ஆலமரம் அல்லது அரச மரம் இந்த 2 மரத்தில் ஏதாவது ஒரு மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த மரத்திடம் சென்று உங்கள் கடன் சுமை தீர வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து, நமஸ்காரம் செய்துவிட்டு, முடிந்து வைத்திருக்கும் தேங்காயை எடுத்து அந்த மரத்தில் கட்டிவிட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும். கையில் தேங்காயை வைத்துக்கொண்டு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதை மறந்துடாதீங்க. இது முதல் பரிகாரம்‌.

- Advertisement -

இதை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம் சனிக்கிழமைகளில் செய்யலாம். சூரியன் உதயம் ஆன பிறகு செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பு மாலை 5 மணிக்கு முன்னாலேயே இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு.

அதன் பிறகு ஒரு சங்கட சதுர்த்தி அன்று மஞ்சள் நிற நூலில் 9 தேங்காயை மாலையாக கோர்த்து, விநாயகருக்கு மாலையாக போட்டுவிட்டு, இந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்று விநாயகப் பெருமானை 9 முறை வலம் வர வேண்டும். இந்த இரண்டு பரிகாரத்தில் ஏதாவது ஒன்று செய்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. முதலில் மேலே சொன்ன சிவப்பு நிறதுணி மூட்டை தேங்காய் பரிகாரத்தை செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அக்டோபர் மாதம் அதிர்ஷ்டம் பெருக

இரண்டாவதாக இந்த விநாயகருக்கு மாலை போடும் பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் கடன் சுமையிலிருந்து அதிவிரைவாக வெளிவருவீர்கள். மன நிம்மதியையும் அடைவீர்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல் கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு நல்லதொரு ஆறுதலை தரும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்