இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா, இந்த நெட் பேகை தூக்கி குப்பையில் போடவே மாட்டீங்க. அப்படி இந்த நெட் பேகில் என்னதான் விஷயம் இருக்கு.

net-bag5

நம் வீட்டிற்கு பழங்கள், பூண்டு போன்ற பொருட்களை சிலசமயம் கடைக்காரர்கள் இந்த நெட் பேகில் போட்டுக் கொடுப்பார்கள். குறிப்பாக எலந்தம்பழம் நமக்கு கடைகளில் இந்த பையில் தான் சீசனில் அதிகமாக கிடைக்கும். குழந்தைகள் இந்த நெட் பேகை விளையாடுவதற்காக பயன்படுத்துவார்கள். கொஞ்ச நாட்கள் விளையாடிவிட்டு அந்த நெட்பேக் நமக்கு தேவையில்லை என்று தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் இந்த பேகினை வைத்து நாம் பல உபயோகமான வீட்டுக் குறிப்புகளை செய்து கொள்ளலாம். அது என்னென்ன உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா. வாங்க பார்க்கலாம்.

net-bag4

இந்த நெட் பேகிற்க்கு உள்ளே உங்கள் வீட்டில் மீதமான சின்னச்சின்ன சோப்புகளை போட்டு சேகரித்து வாருங்கள். எல்லார் வீட்டிலும் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் சோப்பில் கடைசியாக தூண்டு சோப்புகள் நிற்க தான் செய்யும். வீணாக கூடிய அந்த சோப்புகளை நெட் பேகில் போட்டு, ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு சமையல் அறை சிங்கை தினந்தோறும் இரவு சுத்தப்படுத்தி விட்டு, கழுவி விட்டு இறுதியாக அந்த சிங்கை, இந்த நெட் பேகில் கட்டி வைத்திருக்கும் சோப்பை வைத்து நன்றாக தேய்த்து அதன் பின்பு ஒருமுறை கழுவி விடுங்கள். உங்கள் சமையலறை எப்போதும் கமகம வாசத்துடன் இருக்கும். கெட்ட வாடையே சிங்கிள் வீசாது.

net-bag

இதேபோல்தான் வாஷ்பேஷனிலும் தினம்தோறும் வாசனையான இந்த சோப்பு துண்டுகளை வைத்து சுத்தம் செய்து பாருங்கள். வாசமாக இருக்கும். இதேபோல் மற்றொரு நெட் பேகை தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த பேகை டாய்லெட் ஃபிளஷில் போட்டு வையுங்கள்.

- Advertisement -

ஃபிளஷ் மேல் பகுதியை திறந்து அதன் உள்ளே, சோப்பு பகுதி போகும்படி வைத்துவிட்டு, மீதமிருக்கும் நெட்பேக் பகுதியை லேசாக வெளிப்பக்கம் வைத்து, மூடியை போட்டு மூடி விட்டால், அது அப்படியே இருக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் பிளஷ் செய்யும் போது உங்களுக்கு வாசம் நிறைந்த தண்ணீர் வரும்.

net-bag3

இதே போல் நிறைய நெட் பேக் கிடைத்தால் அதில் மீதமான சோப்புகளை போட்டு, நம் வீட்டில் கெட்ட வாடை வீசக்கூடிய குப்பை கூடையை கழுவ, துணி அலச பயன்படுத்தும் பக்கெட்டுகளை சுத்தப்படுத்த, என்று நம் இஷ்டம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

net-bag1

உங்க வீட்ல உங்க குழந்தைகளுடன் ஷாக்ஸ் அல்லது உங்களுடைய கணவரின் ஷாக்ஸ் இப்படி துவைத்த சாக்ஸ்களை இந்த நெட் பேக் உள்ளே போட்டு வைத்தமேயானால் அந்த ஷாக்ஸ் எங்கேயும் தொலைந்து போகாமல், காற்று வசதியோடு எந்த ஒரு துர்நாற்றம் வீசாமல் இருக்கும். இப்படி பல உபயோகமான குறிப்புகளை இந்த நெட்பேக் கொடுக்கும். இனி இதை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.