உளுந்து சேர்க்காமல் வெறும் அரிசியை மட்டும் வைத்து மிருதுவான பஞ்சு போன்ற ஆப்பம் நம்ம வீட்டு கடாயிலேயே செய்யலாமே!

aappam-rice
- Advertisement -

பச்சரிசி, உளுந்து எல்லாம் சேர்த்து செய்யப்படும் ஆப்பம் பொதுவாக எல்லோரும் செய்வது தான். ஆப்ப சட்டி இல்லாதவர்கள் ஆப்பம் சுட என்ன செய்வார்கள் தெரியுமா? தோசைக் கல்லிலேயே, கல் தோசை போல மாவை ஊற்றி மூடி வைத்து விடுவார்கள். இது எப்படி ஆப்பம் ஆகும்? ஆப்பம் என்றால் நடுவில் பஞ்சு போன்று தடிமனாகவும், முனையை சுற்றிலும் மெலிதாக மொறுமொறுவென்று இருக்க வேண்டும். இதற்கு ஆப்ப சட்டி தான் தேவை என்று ஒன்றுமில்லை! நம் வீட்டு கடாயில் கூட சூப்பராக செய்து விடலாம். சரி அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை இனி வரும் பத்திகளில் காணலாம் வாருங்கள்.

‘ஆப்பம்’ செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 21/2 கப்,
தேங்காய் – 2 கப்
சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்

- Advertisement -

பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
தேங்காய் தண்ணீர் – 100ml
உப்பு – தேவையான அளவிற்கு

appam

‘ஆப்பம்’ செய்முறை விளக்கம்:
முதலில் ஆப்பம் செய்ய பச்சரிசியை சுத்தம் செய்து கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசி சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வரை நன்றாக ஊறி இருக்க வேண்டும். பின்னர் கிரைண்டரில் அல்லது மிக்சியில் உங்கள் வசதிக்கு ஏற்ப அரிசியை ரவையை விட சிறிய அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரைத்தால் போதும்! அதற்கு மேலும் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

மாவு நன்கு அரைபட்டதும் அதிலிருந்து ஒரு குழிக்கரண்டி மாவை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் மாவுடன் 2 கப் அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக நைசாக மீண்டும் மாவை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தனியாக எடுத்து வைத்திருக்கும் ஒரு கரண்டி மாவுடன் கிரைண்டர் கழுவிய தண்ணீர் அல்லது மிக்ஸியை கழுவிய தண்ணீரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிண்டவும். பேஸ்ட் போல் மாவு கெட்டியாக திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

idly-maavu

பின்னர் இதனை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள் . இப்படி செய்யும் பொழுது ஆப்ப மாவு நன்கு புளிக்க உதவியாக இருக்கும் மேலும் ஆப்பம் மிருதுவாகவும் வரும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே 8 லிருந்து 10 மணி நேரம் வரை புளித்து பொங்கி வரும் வரை ஊற விடுங்கள்.

idly-maavu

மாவு நன்கு பொங்கி வந்த பின் சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு நன்கு நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் தண்ணீர் இல்லை என்றால் சாதாரண தண்ணீர் சேர்க்கலாம். அடுப்பை அதிகமாக வைத்துக் கொண்டு கடாயை நன்கு காய விடுங்கள். ஆப்பம், தோசை எல்லாம் கடாயில் ஒட்டாமல் நன்கு வருவதற்கு முந்தைய நாளே விளக்கெண்ணை தடவி வெயிலில் காயவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒவ்வொரு முறை ஆப்பம் சுடும் பொழுதும் லேசாக எண்ணெய் தடவி விட்டால் போதும்! எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.

aappam

இப்போது கடாய் சூடானதும் மாவை ஊற்றி கடாயை லேசாக இப்படியும் அப்படியுமாக சுழற்றி விட்டால் ஆப்பம் போல அடியில் தடிமனாகவும், சுற்றி இருக்கும் மாவு மெலிதாக மொறுமொறுவென்றும் வரும். மாவு ஊற்றிய உடன் அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூடி போட்டு மூடி வைத்தால் சுவையான சுடசுட மிருதுவான ஆப்பம் தயாராகிவிடும். இதற்கு ஆப்ப சட்டியை தேட வேண்டிய அவசியம் கூட இல்லை. எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது போல் எளிமையாக ருசி மிகுந்த ஆப்பம் செய்து கொடுத்து அசத்தி விடுங்கள்.

- Advertisement -