இந்த ஒரே 1 பொருளை மட்டும் வைத்துக் கொண்டு வீட்டில் இவ்வளவு விஷயங்கள் செய்ய முடியுமா? ஆச்சரியமா இருக்கே!

cleaning-vinegar
- Advertisement -

வீட்டிற்கு உபயோகமாக இருக்கும் இந்த பொருளை பலரும் விலை அதிகம் என்று வாங்குவதே கிடையாது. ஆனால் உண்மையில் இந்தப் பொருளின் விலை மிகவும் மலிவானதே.. ஒரு பாட்டிலின் விலை 50க்கும் குறைவாக தான் இருக்கும். இந்த ஒரே ஒரு லிக்விட் வீட்டையே தூய்மைப்படுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை மிக மிக சுலபமாக இந்த ஒரு லிக்விட் சுத்தம் செய்து கொடுக்கும். அப்படியான சில பயனுள்ள தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

vinegar

வினிகர் வகைகளில் சிந்தடிக் வினிகர்(sythatic vinigar) என்கிற சாதாரண வினிகர், வீட்டின் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் பெரிய மளிகை கடைகளில் கூட கிடைக்கப் பெறுகிறது. இதைத் தேடி அலைய வேண்டிய அவசியம் கூட இல்லை. இதனை ஒரு பாட்டில் நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை எளிதாக சுத்தம் செய்ய முடியும்.

- Advertisement -

அதில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது மூக்கு கண்ணாடி. நீங்கள் அணியும் மூக்கு கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு பிரத்தியேகமாக சில லிக்விட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதைவிட சிறந்த பலனை இந்த வினிகர் உங்களுக்கு கொடுக்கும். ஒரு சொட்டு வினிகர் போட்டு துடைத்து எடுத்தாலே கண்ணாடி புதியது போல் பளபளக்கும். அது போல் முகம் பார்க்கும் கண்ணாடியும் அப்படிதான். முகம் பார்க்கும் கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் சில சொட்டுக்கள் வினிகர் இருந்தால் ஒரு சிறு கரை கூட இல்லாமல் புத்தம் புதிதாக மின்னும்.

wall mirror

வீட்டின் மின்சார ஸ்விச் போர்டுகள் மிகவும் அழுக்காக இருக்கும். அதற்கு ஒரு சிறிய காட்டனில் வினிகர் நனைத்து லேசாக அழுத்தி துடைத்து எடுத்தாலே கரைகள் முழுவதுமாக நீங்கிவிடும். இதற்கு பதிலாக நெயில் பாலிஷ் ரிமூவரையும்(nail polish remover) பயன்படுத்தலாம்.

- Advertisement -

வாஷிங் மெஷினில் இருக்கும் உப்பு கரை நீங்குவதற்கும், ஆங்காங்கே படர்ந்திருக்கும் அழுக்கு போன்ற கிருமிகளை நீக்கவும் வாஷிங் மெஷினில் சிறிதளவு வினிகர் ஊற்றி கொஞ்ச நேரம் ஓட விட்டு தண்ணீரில் அலசி விடலாம். உங்கள் வாஷிங் மெஷின் பளிச்சென்று மாறிவிடும். மாதம் ஒரு முறை இது போல் ட்ரை செய்யலாம்.

washing-mechine

சிந்தடிக் வினிகர் பயன்படுத்தி சுவற்றில் இருக்கும் பென்சில் கறைகளை கூட ஸ்க்ரப்பரால் துடைத்தால் எளிதாக நீக்கி விட முடியும். 3 மூடி சிந்தடிக் வினிகருடன், 2 டீஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப் பயன்படுத்தி தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை வீட்டில் மிக்ஸி, கிரைண்டர், கிச்சன் டைல்ஸ் போன்ற பொருட்களில் இருக்கும் கறைகளை துடைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். விடாப்பிடியான கரைகள் கூட வினிகர் சேர்க்கும் பொழுது சுலபமாக நீக்கிவிடும். இக்கலவையை ஒரு பாலிதீன் கவரில் ஊற்றி உங்கள் வீட்டு பாத்ரூமில் இருக்கும் குழாய்களில் பிடித்துள்ள துரு கரைகளில் படும்படியாக கட்டி விட்டு 24 மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் துரு பிடித்த கரைகள் நீங்கி இருக்கும்.

- Advertisement -

iron-box

அவசரத்துக்கு அயர்ன் பண்ண முடியாத சூழ்நிலையில் வினிகரை துணியின் மீது ஸ்ப்ரே செய்து வைத்து விட்டு காய வைத்தால் போதும். உடை கசங்கி இருந்தாலும் அயன் பண்ணது போல் சூப்பராக மாறிவிடும். மேலும் பாத்திரம் தேய்க்கும் சிங்கிள் அடைப்புகள் இருந்தால் சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு, வினிகரை ஒர மூடி ஊற்றி விட்டால் போதும். சிங்கிள் இருக்கும் அடைப்புகள் மொத்தமும் நீங்கிவிடும். பல் தேய்க்கும் டூத் பிரஷில் இருக்கும் கரைகளை கூட வினிகருடன் சம அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்தால் எளிதாக நீக்கி விட முடியும். மேற்கூறிய குறிப்புகளை எல்லாம் நீங்கள் எளிதாக பின்பற்றக் கூடியவை தான். ஆனால் அதனுடைய பலன்களோ நிச்சயம் வியப்பிற்குரியதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
தொங்கும் காது ஓட்டைகளை 15 நாட்களில், அறுவை சிகிச்சை இல்லாமல் வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து எப்படி சரிசெய்வது? தெரிந்து கொள்ளலாமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -