ரோஜா செடி வளர்க்க ஆசையா? ஆசைப்பட்டால் மட்டும் போதாது! இதையும் கண்டிப்பாக தெரிஞ்சி வெச்சிருக்கணும்.

rose-roja

செடி வளர்ப்புகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பது ரோஜா செடி வகை தான். எல்லோருக்குமே ரோஜா செடி வளர்ப்பது மிகவும் இஷ்டமான ஒன்றாக இருக்கும். பூக்களில் எத்தனை வகைகள் இருந்தாலும், அதில் ரோஜா தனித்தன்மையானது. பூக்களின் அரசியாக கூட ரோஜாவை நாம் பார்க்கலாம். அத்தகைய ரோஜா செடியை வளர்க்கும் பொழுது நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் அந்த ரோஜா செடியில் பூக்கள் பூக்காமல் போய்விடும்.

Roja chedi

ரோஜா செடியில் நிறைய பேர் இந்த தவறை செய்கின்றனர். ரோஜா செடியை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் செடியில் நிறைய பூக்கள் பூக்கும். புதிதாக ரோஜா செடியை வாங்கி வளர்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடியில் முதல் முதலாக வாங்கும் பொழுது பூக்கும் பூவுடன் தான் விற்பனைக்கு இருக்கும். நீங்கள் வாங்கும் புதிய ரோஜா செடியில் பூக்கள் இருந்தால் அல்லது ஒரே ஒரு பூ இருந்தாலும் கூட அதனை அப்படியே விடக்கூடாது. நீங்கள் அந்த ரோஜா பூவை பறித்தால் தான் மற்ற கிளைகள் நிறைய ரோஜா பூக்களை தளிர் விட ஆரம்பிக்கும். எனவே வாங்கிய உடன் அதில் இருக்கும் பூக்களை பறித்து விடுங்கள்.

cutting-rose-plant

உங்களுடைய ரோஜா செடிக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். உரக்கடையில் கேட்டால் கிடைக்கும். வேப்பம் புண்ணாக்கு சேர்த்து கலவையை நீங்கள் செய்து வைத்து விட்டால் அதன் பிறகு அந்த ரோஜா செடிக்கு ஏற்படும் நிறைய பூச்சி பாதிப்புகள் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கப்படும். செடியும் செழிப்பாக வளரும்.

- Advertisement -

அது போல் புதிதாக வாங்கிய ரோஜா செடிக்கு செயற்கையாக விற்கும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாதீர்கள். இயற்கையாக வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் நல்லது. அதை எப்படி செய்வது? என்பதை பார்ப்போம். வேப்ப இலைகள் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நாலைந்து பூண்டை தோலுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை திப்பிகள் கொஞ்சம் கூட இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

garlic-poondu

இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்து செடியின் இலைகளுக்கு ஸ்ப்ரே செய்து வந்தால் போதும். எந்த விதமான பூச்சிகள், எறும்புகள், இலைக்கருகல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். ஏற்கனவே பராமரித்து வரும் செடிகளுக்கு நாம் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் புதிதாக வாங்கிய செடிகளுக்கு இயற்கையாகவே இருக்கும் பொருட்களை வைத்து பராமரிப்பு கொடுப்பது அவசியமாகும்.

rose-plant-spray

ரோஜா செடியில் கிளை விடும் பொழுது முற்றிய கிளையில் ஏழு இலைகள் கொண்ட ஒரு கிளையை உங்கள் பார்த்தால் அவற்றை நீக்கி விடுங்கள். இல்லை என்றால் அது மற்ற கிளைகளை பாதித்து விடும். ஏழு இலைகள் கொண்ட கிளையை முதிர்ந்த கிளையாக பார்க்கப்படுகிறது. அதில் பூக்களும் பூக்காது. அதனை வெட்டாமல் விட்டு விட்டால் மற்ற கிளைகளையும் சாகடித்து விடும். எனவே அந்தக் கிளையை வெட்டி விட்டால் போதும், மற்ற கிளைகள் செழிப்பாக வளரும்.

7-leaves-rose-plant

ரோஜா செடியின் மண் கலவை தயார் செய்த பின் நீங்கள் வைக்க இருக்கும் தொட்டியில் அல்லது எந்த பொருளிலும் நீங்கள் வைத்து வளர்த்தாலும் அதற்கு அடியில் கொஞ்சம் கற்களை போட்டுக் கொள்ளுங்கள். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அவைகள் அந்த மண்ணில் தங்காமல் ஓடி விடுமாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும். மண்ணில் தண்ணீர் தேங்கி இருந்தால் செடிகள் அழுகிவிடும்.வே

ரோஜா மட்டுமல்ல எந்த ஒரு பூச்செடியாக இருந்தாலும், அந்த செடியில் தண்ணீர் தேங்கி இருக்கக் கூடாது என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஈரப்பதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மண் காய்ந்து போனால் லேசாக தண்ணீர் ஊற்றி ஈரப்பதம் ஆக்கிக் கொள்ளுங்கள். இலைகளிலும் தண்ணீரை ஸ்ப்ரே செய்தால் போதும். இப்படி வளர்க்க உங்கள் வீட்டு புது ரோஜா செடியும் விரைவிலேயே நிறைய பூக்கள் பூத்து குழுங்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு செடிகளில் இலைகள் மஞ்சளாக இல்லாமல், பூக்கள் அடர்த்தியான நிறம் பெற இந்த 2 பொருள் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.