உங்கள் வீட்டு செடிகளில் இலைகள் மஞ்சளாக இல்லாமல், பூக்கள் அடர்த்தியான நிறம் பெற இந்த 2 பொருள் போதுமே!

orange-plant-yellowing
- Advertisement -

பொதுவாக செடி வகைகளுக்கு மனிதனுக்கு தேவைப்படுவது போல அதற்கும் சில ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. சத்துக் குறைபாட்டால் செடி வகைகள் செழித்து வளர முடியாமல் போய் விட வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் உங்களுடைய செடிகளில் இலைகள் மற்றும் பூக்கள் பச்சையாக இல்லாமல் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது என்றால் அதற்கு போதிய இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் இல்லை என்று அர்த்தம். அதற்கு இந்த 2 பொருட்களை பயன்படுத்தி எப்படி பிரச்சனையில் இருந்து விடுபட வைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

yellow-leaf

எந்த வகையான பூச்செடியாக அல்லது காய்கறி செடியாக இருந்தாலும் அதனுடைய இலைகளும், பூக்களும் நிறம் குறைவாக வெழுத்துப் போய் இருந்தால் அதற்கு இந்த இரண்டு சத்துக்கள் குறைவாக இருப்பதே காரணமாகும். இவற்றை நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் பொருட்களை வைத்தே குணப்படுத்தி விட முடியும்.

- Advertisement -

இதற்கு முட்டை ஓடு மற்றும் எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோல் தேவைப்படும். ஆரஞ்சு தோல் இருந்தால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எலுமிச்சை தோல்கள் போதுமானது. இதில் இருக்கும் சத்துக்கள் பூக்களுக்கு அடர்த்தியான நிறத்தைக் கொடுக்கும். இவைகளைத் தனியே பயன்படுத்துவதை விட முட்டை ஓடு சேர்த்து பயன்படுத்தினால் வேதிவினை புரிந்து செடிகள் செழிப்பாக வளரும்.

egg3

முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் செடிகளுக்கு நல்ல உரமாக இருக்கும். முட்டை அவித்த முட்டையாக இல்லாமல் நீங்கள் ஆம்லெட் போட பயன்படுத்திய முட்டை ஓடுகளை வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த முட்டையில் ஏற்கனவே சத்துக்கள் நீங்கி விடுவதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

காய்ந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல்களை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலேயே இந்த காய்ந்த முட்டை ஓடுகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக மூன்றாவது பொருளாக உருளைக்கிழங்கு தோல்கள் இருந்தாலும் அவற்றையும் காய வைத்து இதனுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

orange-peel

இந்த கலவையை மீண்டும் வெயிலில் நன்கு உலர வைத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை ஒரே ஒரு டீஸ்பூன் உங்களுடைய செடிகளுக்கு உரமாக போட்டால் போதும். இலைகளும் பூக்களும் மஞ்சள் நிறமாக மாறுவது தடுக்கப்பட்டு நல்ல பச்சை நிறத்தை உங்களுக்கு கொடுக்கும். பூக்களும் அடர்த்தியான நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக பூக்கும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் செடிகள் சீக்கிரமாகவே பட்டுப் போய்விடும். சத்துக் குறைபாட்டால் பூக்களும் அதிகம் பூக்காமல் போய்விட வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

uram4

உங்களுடைய செடிகளுக்கு வாரம் ஒரு முறை வேர்ப் பகுதியில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் மட்டும் தூவி விடுங்கள். பின்னர் லேசாக மண்ணைப் போட்டு மூடி வைத்தால் போதும். இரண்டே நாட்களில் வேதிவினை நிகழ்ந்து உரமாக மாறி ஊட்டசத்து தேவைக்கு ஏற்ப அந்த செடிகளுக்கு கிடைக்கும். இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி நம் வீட்டு பூச்செடிகளை நல்ல அடர்த்தியான நிறத்திற்கு பூக்க வைக்க முடியும். மனிதனுக்கு மட்டுமல்ல நாம் வளர்க்கும் செடிகளுக்கும் ஊட்டச்சத்து இருந்தால் தான் அதுவும் நன்றாக வளரும். இதற்காக பெரிதாக செலவு செய்யவில்லை என்றாலும் இது போல சிறிய அளவிலாவது சற்று மெனக்கெட்டால் போதுமானது.

இதையும் படிக்கலாமே
கேஸ் ஸ்டவ் மேல் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு கறைகளை எளிதாக அகற்ற இந்த 2 பொருள் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -