பெண்கள், நாளை வரக்கூடிய புத்தாண்டு தினத்தை இப்படித்தான் வரவேற்று பாருங்களேன்! உங்க வீட்டில் சண்டை சச்சரவுகள் காணாமல் போவதற்கு இது கூட ஒரு நல்ல வழி.

pooja

நல்ல விசேஷமான நாட்கள் வரும்போது, அந்த நாளை மேலும் சிறப்பான நாளாக மாற்றி, ஒரு குடும்பத்திற்கு சந்தோஷத்தை தரக்கூடிய சக்தி அந்த வீட்டில் இருக்கும் பெண்ணின் கையில் தான் உள்ளது. விசேஷ தினங்களில், எந்த வீட்டில், அந்த வீட்டுப் பெண்கள்  எதிர்பாராத சூழ்நிலையால்கூட வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அந்த வீடு, அந்த பண்டிகை நாளை நிச்சயமாக விசேஷமாக சந்தோஷமாக கொண்டாட முடியாத சூழ்நிலையில் தான் இருக்கும். ஆக, ஒரு வீடு சந்தோஷமாக இருப்பதற்கும், சந்தோஷத்தை இழப்பதற்கு, காரணமாக இருப்பது அந்த வீட்டில் இருக்கும் பெண்கள்தான். இதில் ஒரு துளி அளவும் மாற்றுக் கருத்தே கிடையாது.

poojai

சரி, இப்படிப்பட்ட பெரிய பொறுப்புகளை கொண்ட அந்த பெண் விசேஷ தினங்களில் எப்படி இருக்க வேண்டும்? நம்மில் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் இதை பின்பற்றுவது கிடையாது. மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்பட்டிருக்கும் பெண்கள் விசேஷ தினங்களில் கட்டாயம் நம் பாரம்பரிய உடையான புடவையை அணிந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

காலையிலேயே எழுந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு, சுத்தமாக குளித்து முடித்து விட்டு, தலையை சீவிக் கொண்டு தலை நிறைய பூ வைத்து, பொட்டு வைத்து, நெற்றியில் குங்குமம் இட்டு, உங்களிடம் இருக்கும் அணிகலன்களை அணிந்து கொண்டு, கை நிறைய கண்ணாடி வளையல்களை போட்டுக்கொண்டு, காலில் சத்தம் எழுப்பும் கொலுசோடு முடிந்தால் கைநிறைய மருதாணி இட்டு இருக்க வேண்டும். முக்கியமா ஸ்டைல்ன்னு சொல்லி தலைவிரி கோலத்தோடு இருக்காதீங்க.

women1

இதே அலங்காரத்தோடு உங்கள் வீட்டு பூஜை அறையில், குடும்பத்தோடு சேர்ந்து பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்பு இறைவனுக்கு நிவேதனமாக படைத்த இனிப்பு, உங்கள் வீட்டில் புத்தாண்டுக்காக, நீங்கள் உங்கள் கையாலேயே சமைத்த இனிப்பு பலகாரம் ஆக இருந்தாலும் சரி, கடையிலிருந்து வாங்கி வந்த இனிப்பு பலகாரம் ஆக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், உங்கள் கையாலேயே சிரித்த முகத்தோடு கொடுத்துவிட்டு, உங்கள் கணவருக்கும் அதை அன்போடு கொடுத்து பாருங்கள்.

- Advertisement -

நாளை, புத்தாண்டை மகிழ்ச்சியோடு மகாலட்சுமி அம்சத்தோடு உங்களுடைய வீட்டில் நீங்கள் இப்படி வரவேற்றால், உங்கள் வீட்டில் இருக்கும் மனஸ்தாபங்கள் கோபங்கள், பிரச்சனை இவைகளில் பாதி, முடிந்துவிடும். புத்தாண்டை சந்தோஷத்தோடு துவங்கியதால், உங்களுக்கு வரக்கூடிய அடுத்த வருடம் முழுவதுமே சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. முடிந்தால் குடும்பத்தோடு சேர்ந்து வீட்டின் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது குல தெய்வத்தை நினைத்து வழிபட மறந்து விடாதீர்கள்.

kungumam-kumkum

உங்களுடைய வீட்டில், உங்களுடைய மாமனார் மாமியார், அம்மா அப்பா, தாத்தா பாட்டி, அண்ணன் அண்ணி மூத்தவர்கள் ஸ்தானத்தில் யார் இருந்தாலும், இளையவர்கள் அவர்களுக்கு இனிப்புப் பலகாரத்தை வழங்கி, அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மேலும் நல்ல பலனை கொடுக்கும். உறவுகளுக்குள் ஒற்றுமை பலம் பெற இதுவும் ஒரு நல்ல வழிதான்.

family-deepam

மனைவி தங்களுடைய கணவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெருவதும் குடும்ப ஒற்றுமைக்கு மேலும் ஒரு அடித்தளத்தை போடும். நாளை மட்டும் உங்கள் வீட்டில் புத்தாண்டை இப்படி வரவேற்று தான் பாருங்களேன். சந்தோஷத்தில் உங்கள் மனம் அப்படியே காற்றில் மிதக்க தொடங்கி விடும். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உங்களால் இதை உணர முடியும். முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
2021 புத்தம் புதிய ஆண்டில் நீங்களும் பெரும் அதிர்ஷ்டசாலியாக இந்த 5 விஷயங்களை கடைபிடிக்கலாமே! தூங்கியது போதும் விழுத்துக் கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.