எங்களின் இந்த வங்கதேச ஒருநாள் தொடரின் வெற்றிக்கு காரணம். இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொண்ட இதுதான் – நியூசி கேப்டன் வில்லியம்சன்

kane-williamson

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி தற்போது அவர்களது மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து முடிந்தது.

Seifert

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 49.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆடிய நியூசிலாந்து அணி குப்திலின் சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் : இந்த ஒருநாள் தொடர் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியையும் மற்றும் நம்பிக்கையும் அளித்துள்ளது. கடந்த இந்திய தொடரின் போது (4-1) என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தொடரை இழந்தோம்.

Ross

இந்திய அணி வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டே பாடமே இந்த தொடரில் எங்களை வெற்றியடைய வைத்தது. மேலும், போட்டியை எந்த சிக்கலும் இன்றி முழுமையாக வெற்றியடையவும் நாங்கள் இந்திய அணியிடம் இருந்தே கற்றுக்கொண்டோம். அது இந்த தொடரில் எங்கள் அணிக்கு பெரிதும் உதவியது என்றே கூறவேண்டும் என்று தனது பேட்டியினை முடித்தார் வில்லியம்சன்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணிக்கு எதிரான தொடரில் செய்யவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை. அதனால் வங்கதேச தொடரில் செய்து முடித்தேன் – நியூசி ஆட்டநாயகன் குப்தில்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்