இந்திய அணிக்கு எதிரான தொடரில் செய்யவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை. அதனால் வங்கதேச தொடரில் செய்து முடித்தேன் – நியூசி ஆட்டநாயகன் குப்தில்

guptill
- Advertisement -

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி தற்போது அவர்களது மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து முடிந்தது.

Nz vs Ban

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 49.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆடிய நியூசிலாந்து அணி குப்திலின் சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது குப்திலுக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் குப்தில் பேசியதாவது : இந்திய அணிக்கு எதிரான தொடரில் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், 4 போட்டிகளில் 47 ரன்கள் மட்டுமே குவித்தேன். அதனால், இந்த தொடரில் சிறப்பாக ஆடவேண்டும் என்று நினைத்தேன், மேலும் தொடரையும் கைப்பற்ற நினைத்தேன்.

guptill

மேலும், முதல் போட்டியில் சதம் மற்றும் இந்த போட்டியிலும் சதம் என அடுத்தடுத்து சதம் நடித்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மொத்தமாக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இலங்கை அணி பேட்ஸ்மேனை கைகளை தொட்டு சிரித்த ராபாடா. அடுத்த பந்தே அவர் அவுட் ஆனதால் ஏற்பட்ட சர்ச்சை – வீடியோ ஆதாரம் இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -