இந்திய அணிக்கு நியூசிலாந்து காட்டுவாசிகளும் ரசிகர்களா? இந்திய அணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்டுவாசிகள் – புகைப்படம் உள்ளே

bay-oval

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

indian-team

நாளை காலை பே ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. எனவே, இரண்டு அணிகளும் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய அணியை சந்திக்க காட்டுவாசி குழுவினை சேர்ந்த ரசிகர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு இந்திய அணியும் அனுமதி வழங்கியது.

உலகம் முழுவதும் இந்திய அணிக்கு பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவர்களுடன் இந்திய அணி எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்கள் இணையதளத்தில் உள்ளன. இந்நிலையில் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த காட்டுவாசிகள் இந்திய அணியின் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் இந்திய அணியின் அனுமதி பெற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம் :

இந்திய அணியை அவர்களது முறைப்படி வரவேற்று அவர்களுக்காக அவர்களது சம்பிரதாயத்தினையும் செய்தனர். இந்திய அணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்டுவாசிகள் அவர்களுடன் சிறிது நேரம் மைதானத்தில் உரையாடிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதையும் படிக்கலாமே :

ரோஹித் சர்மா தற்போது வருத்தத்தில் உள்ளார். அதன் காரணம் இதுதான் – சாஹல் பேட்டி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்