முதல் மூன்று போட்டிகளில் அடைந்த தோல்வி காரணமாக நியூசி அணி எடுத்த அதிரடி முடிவு -நியூசி அணி நிர்வாகம்

boult

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளை இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

neesham

இந்நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் சில மாற்றங்களை செய்துள்ளது. நியூசிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டுவரும் நிலையில் அணியில் அதிரடி மாற்றங்களை அணி நிர்வாகம் செய்துள்ளது.

அதன்படி முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்படாத சோதி மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜிம்மி நீஷம் மற்றும் டோட் அஸ்லே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருபவரும் அணியில் இணைந்திருப்பது அணிக்கு புதுஉத்வேகத்தை அளிக்கும் என்று அணி நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

astle

ஒருநாள் தொடர் முடிந்து நடைபெற இருக்கும் டி20 தொடரில் இன்னும் என்ன மாற்றங்கள் இருக்கிறதோ என்று பொறுத்திருந்து பாப்போம்.

இதையும் படிக்கலாமே :

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் இப்படி ஒரு ஆல்ரவுண்டு செயல்பாடு என்னை வியக்க வைத்தது – சுனில் கவாஸ்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்