டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு. நியூசி அணியை முதல் 6 ஓவரிலேயே பழி வாங்கிய இந்திய அணி

Team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இதனால் நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர்.

gugalin

சென்ற முதல் போட்டியில் மிரட்டிய செபர்ட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து 6 வது ஓவரை வீச வந்தார் குருனால் பாண்டியா அந்த ஓவரில் மூன்ரோ மற்றும் மிட்சல் ஆகியோர் ஆட்டமிழக்க செய்தார்.இதனால், நியூசிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ரன்னை கொடுக்காமல் விக்கெட்டை வீழ்த்தி வருகின்றனர். இதனால் இலக்கு சிறியதாக அமையவே வாய்ப்பு உள்ளது.

msd

இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை தக்கவைக்க முடியும் என்பதால் சிறப்பாக விளையாடி வெற்றிபெறும் என்று நமபலாம்.

இதையும் படிக்கலாமே :

ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இடம் பிடிக்க இது ரொம்ப முக்கியம் . சீக்கிரம் கத்துக்கோங்க பண்ட் – ரவி சாஸ்திரி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்