ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இடம் பிடிக்க இது ரொம்ப முக்கியம் . சீக்கிரம் கத்துக்கோங்க பண்ட் – ரவி சாஸ்திரி

Ravi
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த ரிஷப் பண்ட் வரும் உலகக்கோப்பை தொடர் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடர் வாய்ப்பாக இருக்கும் என தேர்வுக்குழுவினர் நினைத்து இந்திய அணியில் பண்ட் -யை இணைத்தனர்.

pant

ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இடம்பிடித்த பண்ட் 10 பந்துகளுக்கு வெறும் 4 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அவரின் ஆட்டம் பற்றி பலரும் பல கருத்துக்களை கூறிவந்த நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதில் கவாஸ்கர் கூறியதாவது : பண்ட் நிச்சயம் திறமை மிக்க வீரர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஆட பழகிக்கொள்ள இன்னும் சிறிது காலம் எடுக்கும் எனவே, அவர் அதுவரை பொறுமை காக்க வேண்டும்.

pant

விக்கெட்டுகள் வீழ்ந்தால் அந்த சரிவினை சமாளிக்கும் பக்குவம் வர அவர் பழகி கொள்ள வேண்டும். மேலும், இப்போது அவர் வெறும் 11 டி20 மற்றும் 9 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். எனவே, அவருக்கு பொறுமை ரொம்ப அவசியம் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

யோ-யோ டெஸ்ட்டை முதன் முறையாக கொண்டுவந்த போது என்னை வெறுத்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா – ரவி சாஸ்திரி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -