நாள் முழுவதும் ஒரே மாதிரியாக உழைப்பவர்களுக்கு உடலளவில் சோர்வு இருக்கும். இந்த சோர்வு நம் உடம்பில் இருக்கும் செல்களை பலவீனமடைய செய்யும். புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் நம்முடைய முகமும் பொலிவாக இருக்கும். இரவில் மட்டும் இந்த விஷயத்தை செய்து வருபவர்களுக்கு, சரும ரீதியான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து முகம் கண்ணாடி போல மின்னும். பொலிவான சருமத்திற்கு இரவு நேர டிப்ஸ் என்னவென்று இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் அறிவோம் வாருங்கள்.
தினமும் இரவு தூங்க செல்லும் முன் இந்த விஷயத்தை செய்து விட்டு தூங்கினால் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது சருமம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இதற்கு முதலில் மூன்று பொருட்கள் தேவை. இன்ஸ்டன்ட் ஆக கடைகளில் கிடைக்க பெறும் இந்த மூன்று பொருட்களை தரமானதாக தேர்ந்தெடுத்து பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்க செல்லும் முன் ஒரு சிறிய அளவிலான பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
நைட் க்ரீம் செய்ய தேவையான பொருட்கள் :
நைட் க்ரீம் செய்முறை விளக்கம் :
பவுலில் முதலில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை கத்தரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் எட்டில் இருந்து பத்து சொட்டுக்கள் வரை சுத்தமான ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கடைசியாக அரை ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல் ஃபிரஷ்ஷாக சேர்த்தாலும் சரி தான், கடையில் வாங்கி சேர்த்தாலும் சரி தான். இந்த மூன்று பொருட்களையும் சேர்த்ததும் ஆள்காட்டி விரலை வைத்து நன்கு கலந்து விட வேண்டும். 10-ல் இருந்து 15 நிமிடங்கள் கைகளால் நன்கு வேகமாக கலந்து விட்டால் கிரீம் கன்சிஸ்டெண்சிக்கு உங்களுக்கு கிடைக்கும்.
ஆரம்பத்தில் தண்ணீர் போல இருந்தாலும், இப்படி வேகமாக கலந்து விடும்பொழுது அது கெட்டியாக மாற ஆரம்பிக்கும். பின்னர் கிரீம் போல மாறிவிடும். இரவு தூங்க செல்லும் முன்னர் இந்த கிரீமை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். நன்கு உலர்ந்ததும் தூங்கச் செல்லுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை சோப் போட்டு கழுவாமல் ஃபேஸ் வாஷ் அல்லது கடலை மாவு, பயத்த மாவு போன்ற இயற்கையான பொருட்களை வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். முகத்தை கழுவும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த நீரினால் கழுவுவது நல்லது.
இதையும் படிக்கலாமே:
பாஞ்சராத்திர தீபம் 2024
டவல் கொண்டு முகத்தை துடைக்கும் பொழுது அழுத்தம் கொடுத்து துடைக்க கூடாது. மென்மையாக ஈரத்தை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். அப்போது தான் சருமம் மிருதுவான தன்மையுடன் இருக்கும். இது போல தினமும் இரவில் பிரஷ்ஷாக ஒவ்வொரு நாளும் தயார் செய்து தடவி, காலையில் எழுந்தும் முகத்தை இதே முறையில் கழுவி வந்தால், சரும ரீதியான எல்லா விதமான பிரச்சனைகளும் முற்றிலும் தீர்ந்து முகம் ஒரு குழந்தையின் சருமம் போல மென்மையான மற்றும் ஈரப்பதத்துடன் எப்பொழுதும் காட்சி தரும். இந்த ஒரு நைட் பேக் போதும் உங்களது எல்லா விதமான சரும பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்லுங்கள். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை ஊக்குவித்து சரும துவாரங்களுக்குள் சென்று வேருடன் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்கிறது.