வீட்டில் இருக்கக்கூடிய தீராத எதிர்மறை சக்திகளை இழுத்துக் கொண்டு வந்து வெளியே எரித்து, பஸ்பமாக்க கூடிய சக்தி இந்த சிறு முடிச்சுக்கு உள்ளது. முடிச்சுக்கு உள்ளே இருக்கும் 3 ரகசிய பொருள் என்ன?

vasal

நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகளுக்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் தான். கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலுக்கு பல பெயர்கள் உண்டு. கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் கெட்ட நேரம் துர்தேவதைகள் இப்படி எதை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. கொஞ்சம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் ‘பேட் டைம்’ என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார்கள். கெட்ட நேரத்தையும், கெட்ட ஆற்றல் என்றுதான் சொல்ல வேண்டும். கெட்ட ஆற்றல் இருப்பதன் மூலமாக தான் நமக்கு நேரம் கெட்ட நேரமாக செயல்படுகின்றது. இதை நிறைய பேர் ஒத்துக் கொள்வார்கள். சில பேர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

annasipo

சரி, அது அவரவர் இஷ்டம். உங்கள் வீட்டில் இருக்க கூடிய கெட்ட சக்தியை ஒழிப்பதற்கு 2 சுலபமான முறைகளை நாம் பார்க்கப் போகின்றோம் இதன் மூலம் உங்களுடைய மனம் அமைதி அடையும். உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

இந்த பரிகாரத்திற்க்கு முதலில் நாம் பயன்படுத்தும் பொருள் நட்சத்திர சோம்பு. அண்ணாச்சி பூ என்றும் இதனை சொல்லுவார்கள். பிரியாணிக்கு பயன்படுத்தக்கூடிய இந்த அண்ணாச்சி பூவை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து அந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க, வீட்டிலிருப்பவர்கள் அந்தப் புகையை சுவாசித்தால், இந்த வாசத்தை சுவாசித்தால் அவர்களுடைய மனது லேசாகும் முயற்சி செய்து பாருங்கள்.

venkadugu

அடுத்தபடியாக அண்ணாச்சி பூ 3, வெண் கடுகு 1 ஸ்பூன், சாதாரண கற்பூரம் (சூடம்) 3, இந்த மூன்று பொருட்களையும் ஒரு சிகப்பு துணியில் வைத்து கட்டி நில வாசப்படியில் தொங்க வைத்து விடுங்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படியில் தொங்க வைத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதை எடுத்து முச்சந்தியில் அல்லது வீட்டு வாசற்படியில் வைத்து கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய நில வாசப்படியில் தொங்கும் ஏழு நாட்களும், இந்த முடிச்சு உங்கள் வீட்டை சுத்தப்படுத்துவதற்கான வேலையை ஆரம்பித்து விடும். இப்படியாக தொடர்ந்து 3 ஞாயிற்றுக்கிழமை செய்தால்கூட வீட்டில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். வென் கடுகுக்கு கெட்ட ஆற்றலை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். பொதுவாகவே கற்பூரத்துக்கு ஆன்மீக ரீதியாக கெடுதலை தடுத்து நிறுத்துவதில் முதன்மை இடம் உண்டு.

sudam

ஆக இந்த மூன்று பொருட்களும் தனித்தனியாக இருக்கும் போதே சக்தி மிகுந்த பொருட்கள்தான். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நம்ம வாசல் படியில் கட்டித் தொங்க விடும் போது நிச்சயமாக இதனுடைய பலன் இரட்டிப்பாகும்.

red-cloth

குலதெய்வத்தை வேண்டி இந்த முடிச்சினை கட்டி தான் பாருங்களேன். இந்த மூன்று பொருட்கள் வாங்குவதற்கு பெரியதாக செலவு கூட ஆகப் போவது கிடையாது. தீராத பிரச்சனை தீர்வதற்கு இத்தனை சுலபமான வழி உள்ளது, இத்தனை நாட்களாக நமக்கு தெரியாமல் போய் விட்டதே, இன்று பரிகாரத்தை செய்தவர்கள் நிச்சயமாக சிந்திப்பீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் இந்தப் பொருளை வைத்தால் நிச்சயமாக வீட்டிற்கு தரித்திரம் தேடி வரும். தீராத பணக்கஷ்டம் வாட்டி வதைக்கத் தான் செய்யும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.