சமையலறையில் இந்தப் பொருளை வைத்தால் நிச்சயமாக வீட்டிற்கு தரித்திரம் தேடி வரும். தீராத பணக்கஷ்டம் வாட்டி வதைக்கத் தான் செய்யும்.

rice
- Advertisement -

அடடா! அரிசியை கூடவா சமையல்கட்டில் வைக்கக்கூடாது. சமையல் அறை என்றால் சமைத்து சாப்பிட அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களில் அரிசியும் ஒன்று. அரிசி இல்லாத சமையல் அறையா? என்று யாரும் கொதித்து எழ வேண்டாம். சமையலறையில் அரிசி மூட்டையை அரிசி டப்பாவை வைப்பதன் மூலமாக கூட வீட்டில் சிலசமயம் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்? ஏன் சமையலறையில் அரிசியை வைக்கக்கூடாது. என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான ஜோதிட ரீதியான விஷயங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rice

பொதுவாகவே சமையலறை சுக்கிரனுக்கு உரிய இடம். அக்னி பகவான் வாசம் செய்யும் இடம். அரிசி சந்திரனின் காரகத்துவமாக சொல்லப்பட்டுள்ளது. சந்திரனோ குளிர்ச்சித்தன்மை வாய்ந்தவர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் ஒன்றாக சமையல் அறையில் இருக்கும் போது, வீட்டில் கஷ்டங்கள் வரும் என்று சொல்கிறது ஜோதிடம். அந்த காலத்தில் அரிசியை மொத்தமாக வாங்கி சமயலறையை தவிர வேறு ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருப்பார்கள். பெரும்பாலும் அந்த காலத்தில் நிறைய வீடுகளில் சமையல் அறையில் அரிசியை வைத்திருக்க மாட்டார்கள்.

- Advertisement -

அரிசி பானையை சமையலறைக்கு வெளிப்பக்கத்தில் அல்லது வீட்டில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் தான் சேமித்து வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதன் மூலம், அன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்த உணவு பொருட்கள் வீணாகாமல் இருந்தது. வீட்டில் இருக்கும் பெண்களின் மன நிலமையும் சமையல் செய்வதில் ஆர்வத்தோடு இருந்தது. குறிப்பாக தன தானியம் வீட்டில் நிறைவாக இருந்தது.

rice1

இந்த காலத்தில் உள்ள பெண்கள் சமையலில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் அந்த காலத்தில் இருந்த பெரும்பான்மையான பெண்களுக்கு, சமையலைத் தவிர வேறு வேலையில் அவ்வளவாக ஈடுபாடு போகாது. இந்த காலத்தில் சமையலறையில் அரிசியைக் கொண்டு வந்து சேமித்து வைப்பதும் கூட, பெண்களின் மன நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக சொல்லலாம். (வீட்டில் பெண்களுக்கு தொடர் கஷ்டம் வந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் சந்திரனின் பலம் குறைவாக உள்ளது என்பதும் ஒரு அர்த்தம். சூடாக இருக்கும் சமையலறையில், குளிர்ச்சியாக இருக்கும் சந்திரனின் அம்சத்தை கொண்ட அரிசியை கொண்டுபோய் வைக்கும்போது, சில எதிர்மறை விளைவுகளை காட்டிவிடும். குறிப்பாக அந்த வீட்டுப் பெண்களுக்கு!)

- Advertisement -

உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை அரிசி டப்பாவை வேறு இடத்தில் மாற்றி தான் பாருங்களேன். ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் அது நமக்கு நன்மைதானே! உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றால், இதை நீங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தீர்வுகாண ஒரு சுலபமான பரிகாரம் இது அவ்வளவுதான்.

money

இதேபோல் தான் மகாலட்சுமியின், சுக்கிரனின் அம்சம் கொண்ட உப்பை முடிந்தவரை இடுப்புக்கு மேல் பக்கத்தில் வைத்து சமையலுக்கு பயன்படுத்த கூடாது. இடுப்புக்கு கீழ் பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். குனிந்து எடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமையலறையில் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் தான். சின்ன சின்ன மாற்றங்கள் தான், இருப்பினும் இதன் மூலம் பெரிய அளவில் முன்னேற்றத்தை பெற முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு நில வாசல் படியில், இந்த பிரச்சனை இருக்குதா? ஒரு முறை செக் பண்ணிக்கோங்க! உங்க வீட்டிற்குள் நல்லதை நுழைய விடாமல் தடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -