இந்த 3 பொருட்களை சேர்த்து நில வாசப்படியில் கட்டி தொங்க விட்டால் போதும். கண்ணுக்குத் தெரியாத கண் திருஷ்டி, கெட்ட சக்தி, தரித்திரம் இந்த 3 நம் வீட்டு வாசலுக்குள் நுழைய முடியாது.

door-vasal-lakshmi
- Advertisement -

கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும், எதிர்மறை ஆற்றலும், நம்முடைய வீட்டிற்குள் நுழைந்து விட்டால், நம்முடைய வீட்டை தரித்திரம் பிடித்துவிடும். தரித்திரம் பிடித்துவிட்டால் மகாலட்சுமி வீட்டில் தங்க மாட்டாள். மகாலட்சுமிக்கு மூத்தவளான மூதேவி, நம் வீட்டில் வாசம் செய்ய ஆரம்பித்து விடுவாள். இந்த கண் திருஷ்டி யையும் எதிர்மறை ஆற்றலையும் தடுத்து நிறுத்துவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், சுலபமாக குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும் இந்த மூன்று பொருட்களை மட்டும் உங்கள் வீட்டு வாசற்படியில் கட்டி தொங்கவிட்டு பாருங்கள். நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

நம்முடைய நில வாசப்படியில் வைக்க வேண்டிய அந்த 3 பொருட்கள் என்ன என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் நாம் வெளியில் செல்லும் போது நம்மை அலங்காரம் செய்துகொண்டு, அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கும்போது எந்த குறையும் கூறி விடக் கூடாது என்பதற்காக பிரகாசமாக தான் வெளியே செல்கின்றோம்.

- Advertisement -

குறிப்பாக, சொந்த பந்தங்கள் சேரும் விழாக்கள் சுபகாரிய நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள்  பண்டிகைகள் போன்ற விசேஷங்களுக்கு அலங்காரம் செய்து கொள்வதில், அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களது புடவை மிகவும் அழகாக இருக்கிறது. நீங்கள் அணிந்திருக்கும் நகை மிகவும் அழகாக இருக்கிறது’ என்று சொல்வதற்காகத் தான்.

dhristi lemon

இப்படியாக உங்களைப் பார்ப்பவர்களின் அந்த கண் திருஷ்டி ‘நம்மிடம் இப்படிப்பட்ட பொருட்கள் இல்லையே என்ற ஏக்கம்’ இவை அனைத்தும் நீங்கள் அணிந்திருக்கும் நகை ஆடை அணிகலன்களில் வந்து தங்கிவிடும். இதோடு சேர்த்து உங்களையும் அந்த எதிர்மறை ஆற்றல் தாக்கிவிடும். இதனால் தான், நீங்கள் அழகாக ஆடை, புதியதாக உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு வெளியே சென்றுவிட்டு வந்த பின்பு உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. தலைவலி வருகிறது. சிலருக்கு காய்ச்சல் கூட வர வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அலங்காரம் செய்து கொண்டு வெளியே சென்றுவிட்டு வந்தால் இன்றளவும் நம்முடைய தாய் நமக்கு திருஷ்டி சுத்தும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். சிறிய வயதில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிக்க வீட்டில் பெரியவர்கள் இருந்தால், திருஷ்டி கழிக்க முடியும். சரி, பெரியவர்களாக வளர்ந்த நமக்கு, திருஷ்டி கழிக்க யாரும் இல்லை என்றால், தனக்கு தானே கூட கொஞ்சமாக கையில் கல் உப்பை எடுத்து சுற்றி போட்டுக் கொள்ளலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

இதெல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட, வீட்டிற்கு வந்த உடனேயே குளியலறைக்கு சென்று உங்களுடைய கை கால்களை கழுவிக்கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு, கொஞ்சம் தண்ணீரை எடுத்து உங்களது தலையில் தெளித்துக் கொண்டால் கூட உங்களிடம் இருக்கும் தோஷம் நீங்கிவிடும். உங்களிடம் இருக்கும் தங்க நகைகளை வீட்டிற்கு வெளியே அணிந்து கொண்டு போய் விட்டு வந்தால், அந்த நகைகளை மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து அதன் பின்பு பீரோவில் எடுத்து வைப்பது நன்மை தரும்.

- Advertisement -

red-cloth

வீட்டிற்குள் நீங்கள் நுழையும் போதே உங்கள் உடம்பில் புகுந்து இருக்கும் கெட்ட சக்தியையும் கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய, மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் உங்களை தாக்காமல் இருக்க, அந்த மூன்று பொருளை இப்போது பார்த்துவிடுவோம். ஒரு சிவப்பு துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பூண்டு பல் 3, சாம்பிராணி பொடி 1 ஸ்பூன், அடுப்புக்கரி 1 துண்டு, இந்த மூன்று பொருளையும் நூல் கட்டி உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் மாட்டி வைத்தாலே போதும்.

poondu

வெள்ளிக்கிழமை அன்று இந்த முடிச்சினை தயார் செய்து வீட்டு, வாசலில் கட்டுவது நன்மை தரும். உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் நீங்கள் நில வாசலை  தாண்டி உள்ளே நுழையும் போது, இந்த 3 பொருட்கள் இழுத்துக் கொள்ளும். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு பிரச்சனையும் நுழைவதற்கு இந்த மூன்று பொருள் அனுமதி கொடுக்காது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமையல் அறையில் குறையாமல் இருக்க வேண்டிய இந்த பொருட்கள்! இந்த இடத்தில் வைத்தால்! வீட்டில் மேலும் அதிர்ஷ்டம் பெருகுமாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -