சமையல் அறையில் குறையாமல் இருக்க வேண்டிய இந்த பொருட்கள்! இந்த இடத்தில் வைத்தால்! வீட்டில் மேலும் அதிர்ஷ்டம் பெருகுமாம்.

annapoorani-uppu-jaadi

அள்ள அள்ள குறையாத அன்னத்தை வாரி வழங்கும் அன்னபூரணியை வணங்கி விட்டு சமையல் செய்பவர்களுக்கு குறைவில்லாத தன, தானியம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே அன்னபூரணியின் படத்தை கட்டாயம் பூஜை அறையில் வைத்துக் கொள்வதை விட சமையல் அறையில் வைத்துக் கொள்வது உசிதமானது. அது போல் சமையலறையில் சில பொருட்கள் குறையாமல் பார்த்துக் கொண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அத்தகைய பொருட்களையும்! அவற்றை வைக்க வேண்டிய இடங்களையும் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

annapoorani

பூஜை அறையில் அன்னபூரணியின் சிறிய அளவிலான பித்தளை சிலையை வாங்கி வைத்து அதில் அரிசியை போட்டு வைப்பது வீட்டில் செல்வ வளத்தை பெருக்கும் என்பது நம்பிக்கை. அது போல் சமைக்கும் பொழுது அன்னபூரணியின் படத்தை வணங்கி விட்டு பின்னர் சமையலை ஆரம்பிக்கும் படி அமைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் மேலும் பெருக செய்யும்.

சமையலறையில் இருக்கும் அரிசி மற்றும் தானியங்களை குறைவில்லாமல் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது போல் கல் உப்பு கட்டாயம் வீட்டில் குறையவே கூடாத ஒரு பொருளாகும். கல் உப்பு தீரும் முன்னரே அதனை வாங்கி சேமித்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது போல் கல் உப்பை பீங்கான் ஜாடியில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

uppu jaadi

இவை எல்லாவற்றையும் விட ஒரு வீட்டில் சுபிட்சம் நிலைத்து இருக்க அந்த வீட்டின் சமையலறையில் நிறைகுடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது குடத்தில் தண்ணீர் நிரம்பி இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் எல்லாம் சமையல் அறையில் தண்ணீர்ப் பானைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் இல்லையென்றாலும் இன்னொன்றில் தண்ணீர் நிச்சயம் நிரம்பி இருக்கும். ஆனால் இப்போது தண்ணீரை பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து வைத்திருக்கிறோம்.

- Advertisement -

சமையலறையில் தண்ணீர் பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருப்பதை விட, ஒரு குடம் தண்ணீரை ஆவது செம்பு, பித்தளை அல்லது மண் பானையில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஊற்றப்பட்டு இருக்கும் தண்ணீரை ஒரு போதும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

kudam

அது போல் குபேரனுக்கு பிடித்த ஊறுகாய் வீட்டில் குறையாமல் இருந்தால் செல்வமும் குறையாது என்கிற நம்பிக்கையும் உண்டு. அந்த ஊறுகாய் பாட்டில் உப்பு ஜாடியின் பக்கத்தில் வைப்பது தான் மிகவும் சரியானதாக இருக்கும். உப்புடன், ஊறுகாய் சேரும் பொழுது தான் அங்கு மகாலட்சுமி கடாட்சம் பெருகுகிறதாம். எனவே உப்பு வைத்திருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஊறுகாயை வையுங்கள்.

oorugaai-pickles

அது போல் அரிசியை வைத்து இருக்கும் இடத்தில் தான் ஆழாக்கும் வைத்திருக்க வேண்டும். அவற்றை தனியாக வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அதே போல அரிசிக்கு பக்கத்தில் தான் மற்ற தானிய வகைகளை வைக்க வேண்டும். வேறு ஒரு இடத்தில் தனியாக தானியங்களை வைக்கக் கூடாது.

poojai

சமையலறையில் பூஜை செய்யக் கூடிய இடத்தையும் அமைத்து வைத்திருப்பவர்கள் அதனை கட்டாயம் மூடி வைத்திருப்பது அவசியமாகும். அந்த இடத்தில் சமையலுக்கு தேவையான எந்த ஒரு பொருளும் கட்டாயம் வைக்கவே கூடாது. இடமில்லை என்றாலும் பூஜைக்கு உரிய இடத்தில், சமையலுக்கு உரிய பொருட்களை வைப்பது அவ்வளவு நல்லதல்ல.

இதையும் படிக்கலாமே
இந்த விளக்கை மட்டும் உங்கள் வீட்டில் மூலையில் போட்டு வைத்தால் இதெல்லாம் தான் நடக்கும் தெரிந்து கொள்ளுங்கள்! இந்த விளக்கை ஏற்றினால் தான் வருமானம் தடையில்லாமல் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.