இதை செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் குடும்பம் சீரும் சிறப்போடும் செழிப்பாக இருக்கும்.

pooja-room-kula-dheivam
- Advertisement -

ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியமான ஒன்று. அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம்மில் சில பேர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுகின்றோம். சந்தோஷமாக இருக்கும் போது குலதெய்வம் நம் நினைவிற்கு வருவது இல்லை. கஷ்டம் வரும்போதுதான் ‘இவ்வளவு பிரச்சனை எதனால் வருகிறது’ நாம் என்ன தவறு செய்து விட்டோம். ஏதேனும் தெய்வ குற்றமாக இருக்குமோ, என்று அப்போது தான் நம்முடைய நினைவுக்கு குலதெய்வம் வரும்.

kuladheivam

கஷ்டப்படும் போது மட்டும் குல தெய்வத்தை நாம் வழிபடக்கூடாது. வருடத்திற்கு ஒருமுறை நிச்சயமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் அதுவும் குலதெய்வ கோவிலுக்கு சென்று. இது அல்லாமல் தினமும் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றுவது மிக மிக நல்லது. சந்தோஷம் வரும்போது கொஞ்சம் குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். நம்முடன் சேர்ந்து குலதெய்வமும் மனமகிழ்ச்சி அடையும்.

- Advertisement -

சரி, வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. எதனால் தடைகள் என்று தெரியவில்லை. வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். வீட்டில் சுப காரிய தடை, சண்டை சச்சரவு, கடன் தொல்லை, பணப்பிரச்சனை இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்க, குலதெய்வம் வீட்டிற்கு வர வழைக்க, குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற நாம் செய்ய வேண்டியது என்ன.

சிவப்பு நிறத்தில் ஒரு சதுர வடிவிலான காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் விரலி மஞ்சள் – 2, குங்குமம் – 1 ஸ்பூன், விபூதி – 1 ஸ்பூன், சந்தனப் பொடி – 1 ஸ்பூன், சாம்பிராணி தூள் – 1 ஸ்பூன், நம்முடைய வீட்டின் உள்ளே இருக்கும் மணல் – 1 கைப்பிடி அளவு, அடுப்புக்கரி – 1 துண்டு, இந்த பொருட்களை வைத்து, ஒரு கருப்பு நூலால் கட்ட வேண்டும். (உங்கள் வீட்டை சுற்றி மண் எடுக்க முடியவில்லை என்றால், உங்கள் வீட்டில் தொட்டியில் செடி வளர்த்து வந்தால் கூட அதிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஒரு கைப்பிடி மண் தான் மிகமிக அவசியம்.)

- Advertisement -

நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். கருப்பு நூலை வைத்துதான் கட்ட வேண்டும். இந்த மூட்டையை தயார்செய்ய துணியில் முடிச்சை எல்லாம் போட்டு விடக்கூடாது. இந்த முடிச்சை தயார் செய்யும்போது உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே பரிகாரத்தை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு அய்யனார் உங்கள் வீட்டு குலதெய்வமாக இருந்தால், ‘என் குல தெய்வம் அய்யனார் என் வீட்டிற்குள் வர வேண்டும்’ என்று மனதார நினைத்து கொண்டே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

manjal-mudichu

இந்த முடிச்சை தயார் செய்துவிட்டு இதற்கு சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும். பூஜை அறையில் வைத்து. சாம்பிராணி தூபம் காண்பித்த பின்பு நிலை வாசலுக்கு உள்பக்கம் இந்த மூட்டையை மாட்டி வைத்து விடுங்கள். நிலை வாசலுக்கு வெளியில் இதை மாட்டக் கூடாது. நிலை வாசலுக்கு உள்ளே, நிலை வாசலுக்கு மேலே உள்ள சுவற்றில் ஆணி அடித்து இந்த மூட்டையை மாட்டிவிடுங்கள். நிலைவாசல் சட்டத்தில் மரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ஆணி அடிக்க கூடாது.

kula-dheivam

3 வருடத்திற்கு ஒருமுறை இந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றினால் மட்டும் போதும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது குல தெய்வத்தை நினைத்து இந்த முடிச்சுக்கு சாம்பிராணி தூபம் காண்பித்து வரவேண்டும். இந்த முடிச்சை உங்கள் நில வாசலுக்கு உள்ளே மாட்டிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வீட்டில் சில நல்ல நேர்மறை மாற்றங்கள் தெரியத் தொடங்கும். உங்களை அறியாமலேயே உங்கள் வீட்டில் ஒரு சந்தோஷம் வர தொடங்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். மன நிம்மதியை அடைவீர்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்து நல்ல பலனை அடைய வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -