செவ்வாய், வெள்ளியில் நிலை வாசலில் மஞ்சள் தேய்க்கும் பொழுது இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்!

vasal-vilakku-manjal
- Advertisement -

பொதுவாக அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நிலை வாசலில் விளக்கு ஏற்றுவது என்பது விசேஷமான பலன்களைக் கொடுக்க வல்லது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும் வருகை புரிவதாக ஐதீகம் உண்டு. இந்நேரத்தில் நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் இட்டபடி வாசலுக்கு கீழே விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் எந்த விதமான தோஷங்களும் நெருங்காது என்று கூறுவார்கள். காரியத்தடைகள், சுபகாரியத் தடைகள், துர் சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தகைய நிலை வாசல் பகுதியில் மஞ்சள் தேய்க்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்தப் பகுதியின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக நிலை வாசலில் விளக்கு ஏற்றிய பின்பு தான் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்கிற நியதி உண்டு. வீட்டில் ஏற்றிவிட்டு பிறகு வந்து வாசலில் ஏற்றக்கூடாது. வாசலிலிருந்து தெய்வங்களை உள்ளே அழைப்பதற்காக இவ்வாறு நிலை வாசலில் விளக்கு ஏற்றப்படுகிறது. எனவே முதலில் வாசலில் ஏற்ற வேண்டும், பிறகு தான் பூஜை அறையில் ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தில் நீங்களே விழித்துக் கொள்ளுங்கள். பிறகு பல் துலக்கி விட்டு, முகத்தை அலம்பி விட்டு வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட்டு மகாலட்சுமியை நம் வீட்டின் பக்கம் ஈர்க்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமையில் நிலை வாசலில் விளக்கை ஏற்றுபவர்கள் அதற்கு முந்தைய நாளே நிலை வாசலில் இருக்கும் மஞ்சளை துடைத்துவிட்டு புதியதாக மஞ்சள் தேய்த்து வைக்க வேண்டும்.

வாசலுக்கு மஞ்சள் தேய்ப்பது என்பது ரொம்பவே விசேஷமான ஒரு நடைமுறையாகும். இன்று வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்த அனுமதி பல இடங்களில் மறுக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சிலரால் ஏற்ற முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் ஒரு முக்காலி வைத்து வாசலுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல், முக்காலிக்கு மஞ்சள், குங்குமம் தடவி அதன் மீது அகல் விளக்கு வைத்து விளக்கு ஏற்றலாம்.

- Advertisement -

விளக்கை ஏற்றுபவர்கள் பொதுவாக தரையில் வைத்து ஏற்றக்கூடாது எனவே முக்காலி அமைத்து ஏற்றுவது ரொம்பவே சிறப்பானது. வாசலுக்கு மஞ்சள் தேய்க்கும் பொழுது தரையிலிருந்து ஒரு அடிக்கு மஞ்சள் தேய்க்க வேண்டும். பலரும் பாதி அடிக்கு கூட மஞ்சள் தேய்ப்பது கிடையாது. உங்கள் கை அளவின்படி ஒரு அடி அளவிற்கு மஞ்சள் தேய்த்து உங்கள் குடும்ப வழக்கப்படி குங்குமத்தை இட்டுக் கொள்ளுங்கள். சிலர் மஞ்சள், குங்குமத்துடன் நாமத்தையும் கரைத்து பயன்படுத்துவார்கள். எனவே அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப இவற்றை செய்வது நல்லது.

பின்னர் மறுநாள் காலையில் இது போல் எழுந்து கோலம் போட்டு, வாசல்படியில் விளக்கு ஏற்றி விட்டு, பின்னர் வீட்டில் வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை அறையில் விளக்கு எரியும் பொழுது திரும்ப போய் படுத்துக் கொள்ளக் கூடாது. பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவது என்பது பெரும்பாலும் பெண்கள் செய்வது உசிதமானது. அப்படி பெண்கள் செய்ய முடியாத பட்சத்தில் ஆண்கள் செய்வது தவறு ஒன்றும் கிடையாது. இது போல ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியிலும் செய்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சனைகளும் அணுகுவதில்லை. செல்வ செழிப்பு என்பது தானாகவே வந்து சேரும்.

- Advertisement -